.

Pages

Tuesday, February 12, 2019

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் வழித்தடத்தில் 2 எக்ஸ்பிரஸ், 4 பாசஞ்சர் ரயில்கள்!

அதிராம்பட்டினம், பிப்.12
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் இறுதிகட்டப் பணிகள் நடைபெறுவதாகவும், பணிகள் அனைத்தும் அடுத்த மாதம் மார்ச் 15 க்குள் நிறைவடைய இருப்பதாக சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார் தகவல் தெரிவித்தார்.

காரைக்குடி ~ திருவாரூர் இடையிலான 147 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணியில், தற்போது காரைக்குடி ~ பட்டுக்கோட்டை வரையிலான 73 கி.மீ. தொலைவுக்கு அகலப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருநெல்லிக்காவல் ஆகிய பகுதிகளில் ரயில் நிலையங்கள் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், பட்டுக்கோட்டை முதல், அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வரையிலான வழித்தடத்தில் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பணிகள் அனைத்தும் அடுத்த மாதம் மார்ச் 15 க்குள் நிறைவடைய இருப்பதாக சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார் தகவல் தெரிவித்தார். 

மேலும், இந்த வழித்தடத்தில் முதல் கட்ட சோதனை ஓட்டத்தை வரும் மார்ச் மாத இறுதியில் நடத்த இருப்பதாகவும், பின்னர், சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்த இருப்பதாகவும், அப்போது, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்துவார் எனவும், சிஆர்எஸ் (கமிஷன் ஆப் ரயில்வே சேப்டி) அனுமதி கிடைத்த பிறகு ரயில் சேவை தொடங்கும் என்றும், இந்த வழித்தடம் வழியாக 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 4 பாசஞ்சர் ரயில்கள் இயக்க இருப்பதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.