அதிராம்பட்டினம், ஆக. 01
இசுலாமியர்களின் தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் பண்டிகை தமிழகமெங்கும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடை. இவர்களின் மழலைப் பேச்சு முதல் அவர்கள் செய்யும் குசும்பு வரை அருகில் இருந்து மனமகிழலாம். அதுவும் பண்டிகை காலமென்றால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. பெருநாள் மற்றும் விஷேச தினங்களில் குழந்தைகள் புதுப்புது டிசைன்களில் புத்தாடை உடுத்தி நகர்ப்புறங்களில் கலர்கலராக வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அதிலும் சில துடிப்பான குழந்தைகளின் மழழைப்பேச்சும், தான் அணிந்து இருக்கும் உடையைப்பற்றியும், பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து பெறுகின்ற அன்பளிப்பு காசு பணத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.
எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு (editoradirainews@gmail.com) அனுப்பித்தந்தால் உடனடியாக தளத்தில் பதியப்படும்.
பெருநாளன்று அதிரை நியூஸ் வாசகர்கள் அனுப்பி வைத்த சுவீட் பேபிகளின் கலர் ஃபுல் புகைப்படங்கள் இதோ...
சுட்டிக்குழந்தைகள் அனைவர்களுக்கும் எனது அன்பான இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete