அதிராம்பட்டினத்தில் புதிய 110 KVA துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக, சேக்கனா எம்.நிஜாமுதீன் கடந்த (13-02-2020) அன்று முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய கோரிக்கைக்கு, துணை மின் நிலையம் அமைப்பதற்கு மின்சார வாாியத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு முன்மொழிவு மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிந்து துணை மின் நிலையம் அமைத்து சீரான மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரிய மாவட்ட முதன்மை பொறியாளர் கடந்த (19.02.2020) அன்று பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
முதல்வரின் தனிப்பிரிவுக்கு சேக்கனா எம்.நிஜாமுதீன் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்னழுத்த ஏற்ற தாழ்வுகளை குறைக்கும் வகையிலும், அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரத்தை சீராக கொண்டு செல்லும் வகையில் அதிராம்பட்டினத்தில் 110 KVA துணை மின் நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும், இப்பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதில் தொடர்ந்து காலதாமதம் நிலவி வருகிறது. இதனால், இப்பகுதியில் அடிக்கடி மின் துண்டிப்பு / மின் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இதன் பணிகளை மின்வாரியம் எப்போது தொடங்கும்? இதுதொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் முன்னெடுத்துள்ள பணிகள் பற்றி விளக்கமளிக்கவும்.
கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய மாவட்ட முதன்மை பொறியாளர் அனுப்பி இருக்கும் பதில் கடிதத்தில் கூறியிருப்பது;
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் மின் அழுத்த குறைபாடுகளை சாிசெய்ய அதிராம்பட்டினத்தில் 110 KVA துணைமின்நிலையம் அமைப்பதற்கு மின்சார வாாியத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு முன்மொழிவு மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது விரைவில் பணிகள் முடிந்து துணைமின் நிலையம் அமைத்து சீரான மின்சாரம் வழங்கப்படும் என்று மனுதாரருக்கு 19.02.2020 அன்று தொிவித்துக்கொள்ளப்பட்டது. ந.க 163 நாள். 20.02.2020 (மேற்பாா்வை பொறியாளா் தமிபவ தஞ்சாவூா்)
Assalamu alaikkum, please don't send the Feb-20 matter now.
ReplyDeleteAssalamu Alaikum respected reporter
ReplyDeleteFor your kind attention We are now starting month of September 2020 Fyi pls.