இலங்கையில் இருந்து கடல் காகம், சைபீரியாவில் இருந்து கொசு உல்லான், அண்டார்டிகா பகுதியில் இருந்து கடல் ஆலா, குஜராத்தில் இருந்து செங்கால்நாரை, கூழைக்கிடா, மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து கரண்டிவாயான், நத்தை கொத்திநாரை உட்பட 40 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. இன்னும் சில நாட்களில் லட்சக்கணக்கான பறவைகள் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. பறவைகளை காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் கோடியக்கரை பம்ப்ஹவுஸ், இரட்டைத் தீவு, கோவைத் தீவு, மரைக்கான் தீவு, கடற்கரை பகுதி, மணவாய்க்கால் பகுதிகளிலும் கண்டு களிக்கலாம். கடந்த காலங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயத்துக்கு வந்து சென்றன.
தற்போது பருவநிலை மாற்றத்தாலும், வேட்டையாடுதல், பறவைகளின் உணவுகளை மீனவர்கள் பிடித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் படிப்படியாக பறவைகள் வரத்து குறைந்து வருகிறது. பறவைகள் வருகையை அதிகரிக்க ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். சரணாலயத்தை சுற்றி பார்க்க வருபவர்களுக்கு உணவு, குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி : தினகரன்











This comment has been removed by the author.
ReplyDeleteகாலத்திற்கேற்ற அருமையான பதிவு ...என்னதான் இருந்தாலும் அதிராம்பட்டினம் மரைக்கானாச்சே ....அந்த இஷா தொழுகைக்கு பிறகு .....இடியப்பம் சூடான புரட்டாகளுக்கு இந்த பறவைகளின் மிளகு கறி ஆணாம் ..அம்புட்டு ருசி ....இருப்பினும் வனத்துறைக்கும் மதிப்பு அளிப்போம் ...விருந்தாளிகளை ...விருந்து படைத்துவிட வேண்டாம் ....
ReplyDeleteகொக்கு வெல கொரஞ்சிடுமோ
ReplyDelete