செடியன் குளத்திற்கு நீரை கொண்டு வருவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. முதல் வழிமுறை சிஎம்பி வாய்க்கால் மூலம் பெத்தான் குளம் வழியாக ஆற்று நீரை கொண்டு வருவது. இது வழமையாக பின்பற்றப்படுவதாகும். இரண்டாவது வழிமுறை ஏரியிலிருந்து நிரம்பி வீணாக கடலுக்கு செல்லும் நீரை, ( மூன்று கண்ணு பாலத்திலிருந்து ) வாய்க்காலிலிருந்து செடியன் குளம் வாழ்வீச் வரை செல்லும் பாதையை சீரமைத்து குளத்திற்கு நீரை கொண்டு வருவது. தற்போது இந்த வழிமுறையை பின்பற்றி அதிரை இளைஞர்கள் குறிப்பாக மேலத்தெரு, கீழத்தெரு, பிலால் நகர் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் ஒன்றிணைந்து இதற்கான முயற்சியில் கடந்த மூன்று தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர். கடலில் வீணாக சென்று கலக்கும் தண்ணீரை தடுத்து செடியன் குளத்திற்கு திருப்பி விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்புடைய வாய்க்காலில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், தண்ணீர் வேறு திசைக்கு செல்லாதவாறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக போதுமான மணல் மூடைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். குளம் வரை செல்லும் வாய்க்கால் வரப்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால் சீரமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பயன்தரும் செடியன் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவது மிகவும் அவசியம் என்பதால் கடந்த மூன்று நாட்களாக 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த பணிகளை செய்து வருகின்றனர். தற்போது பள்ளி கல்லூரி விடுமுறை தினங்கள் என்பதால் கூடுதல் இளைஞர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக பிலால் நகர் பகுதியின் வாய்க்கால் ஓரம் வசிக்கும் காலனிவாசிகள் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தண்ணீர் வரும் வாய்க்காலில் ஏதேனும் உடைப்புகள் - அடைப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க இளைஞர்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்று பகல் செடியன் குளத்திற்கு ஏரிநீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வித தடங்களுமின்றி ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து சீராக வந்தால் செடியன் குளம் நிரம்பிவிடும் என கூறப்படுகிறது. நீர் நிரம்பியவுடன் இதன் இணைப்பில் அடுத்துள்ள கீழத்தெரு செயனாங் குளத்திற்கு தண்ணீர் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
களத்திலிருந்து அஜீம்
This comment has been removed by the author.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
Deleteதகவலுக்கும் நன்றி.
களைப்பு உணராத இளைஞர்கள், களத்தில் இறங்கி இப்பணி செய்வது பாராட்டுக்கு உரியது. எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மை உண்டாவதாக.
வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
இவர்களின் முயற்சிக்கு இன்ஷா அல்லாஹ், இறைவன் துனை செய்வானாக ஆமீன் .
ReplyDeleteநாம் நினைத்தால் சாதிக்கலாம் என்று நிருபிக்கும் செயல், பொது நலனில் அக்கரைக்கொண்டவர்களுக்கு என் வாத்துக்கள்
ReplyDeleteGood work, hats off to youth
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமாஷா அல்லாஹ்... நன்மைகளை கொள்ளை அடிக்கும்,
ReplyDeleteஅதி வீர அதிரை இளைஞர்களே அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன்..
வாழ்த்துக்கள் .
அல்ல்ஹம்து லில்லாஹ்
ReplyDeleteஅல்லாஹுவே போதுமானவன் உங்களுக்கு நற் கூலி கொடுபதரற்கு
[13:17] "அவன்தான் மேகத்திலிருந்து மழையைப் பொழிவிக்கிறான். (அது பொழிகின்ற) நீருக்குத்தக்கவாறு (சிறிய பெரிய) ஓடைகளாக ஓடுகிறது. (அவ்வோடைகளில்) வெள்ளம் நுரைகளை மேல் சுமந்து செல்கிறது. இவ்வாறே ஆபரணங்களுக்காகவோ அல்லது மற்ற சாமான்களுக்காகவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும்பொழுதும் அதைப் போன்ற (அழுக்கு) நுரை மிதக்கிறது. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் இதனை உதாரணமாகக் கூறுகிறான். ஏனெனில், (அழுக்கு) நுரையோ பயனற்றதாக (இருப்பதால்) அழிந்து (மறைந்து) விடுகிறது. மனிதனுக்குப் பயனளிக்கக் கூடியவையோ பூமியில் (சேர்த்து வைக்கப்பட்டு) நிலையாக இருக்கின்றன. இவ்வாறே (நம்பிக்கை அற்றவர்களை அழுக்கு நுரைக்கும், நம்பிக்கையாளர்களை பூமியில் சேர்த்து வைக்கப்படும் பயன்தரும் பொருள்களுக்கும் ஒப்பிட்டு) அல்லாஹ் உதாரணம் கூறுகிறான்.
அஸ்ஸலாமு அழைக்கும்!
ReplyDeleteமாஷா அல்லாஹ்.... இப் பெரும் பணியை இரவு பகல் பாராமல் பணிவோடு நிறைவேற்றி தந்த அணைத்து சகோதர்களுக்கும். இணையத்தில் வாழ்த்து பதிவு செய்த நன்பர்களுகும் நன்றி... இன்ஷா அல்லாஹ் இன்று இரவு சுமார் 8மணிக்கு செடியன் குளத்திற்கு தண்ணீர் வந்து பாயும் என எதிர் பார்க்கிறோம்....
இதை தொடர்ந்து, நிரந்தரமாஹ ஆண்டுதோறும் தண்ணீர் வர முயற்சிக்கிறோம்....
வஸ்ஸலாம்
அன்புடன்
மான் ஷேக்
Human Rights
Adirampattinam-614701
செடியன் குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர பாடுபடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று சொல்வது போல பாகு பாடின்றி பொது விஷயங்களில் இப்படி அனைவரும் கைகோர்த்து நின்றால் நம் சமுதாயம் இன்னும் எத்தனையோ காரியங்களை சாதிக்கலாம்.
ReplyDeleteஇதில் பாடுபடும் அத்தனை உள்ளங்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன். சரியான நேரத்தில் முடிக்க வேலையில் நம்ம இளைஞர்கள் சளைத்தவர்கள் இல்லை, அதிரை சேர்மன் நினைச்சா இந்தக் குளம் எப்பவோ நிரம்பி இருக்கும், அவர் இதில் தலையிடாமல் நைசாக பிலிம் காட்டிவிட்டு போயிட்டாரு.
ReplyDeleteசெடியன் குளத்துக்கு யாருடைய பணம் செலவாகுது? மற்ற குளங்களுக்கு யாருடைய பணம் செலவாகுது? கணக்கு வழக்குகள் பொதுவில் பதியப்படுமா? எங்கேயோ இடிக்குதே, அதப்பக்கம் உள்ள குளங்களுக்கு செலவானதில் பல லட்சம் என்று துபாயில் அலசல் புலசலா பேச்சு அடிபடுதே, அந்த பல லட்சம் யாருடையது?