.

Pages

Thursday, November 13, 2014

முத்துப்பேட்டை நகரில் குளம் குட்டை வாய்க்கள் களை தூர் வார வேண்டும் தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை !

முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயலாளர் முகமது புகாரி பேரூராட்சி செயல்அலுவலரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட குளம், குட்டைகள் தான் முத்துப்பேட்டை நகர மக்களுக்கு நீர்நிலை ஆதாரங்கள். மழைகாலங்களில் பெய்யும் மழை மற்றும் ஆற்றில் வரும் நீரை இதில் தேக்கி வைப்பதன் மூலம் கோடைகாலங்களில் நிலத்தடி நீர் குறையாமல் பாதுகாக்கலாம். இப்பொழுது மழைகாலங்கள் ஆரம்பமாக இருப்பதால் குளத்திற்கு தண்ணீர் வரும் வழிகள், வாய்க்கால்கள் காடுகளாகவும் சாக்கடை மற்றும் குப்பைகள் மேடுகளாகவும் மாறிப்போய்விட்டது. இவற்றை அனைத்தையும் தூர்வாரி சுத்தம் செய்து தரவேண்டும். இதுகுறித்து ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை அதன் விளைவு இன்று நீர் நிலைகளை சரியாக பராமறிக்காததால் சென்ற கோடைகாலங்களில் முத்துப்பேட்டை மக்கள் தண்ணீருக்காக பட்ட சிரமத்தை காணமுடிந்தது. அதைபோல் முத்துப்பேட்டை மக்கள் தாங்கள் கடன்களை பெற்றும் இருக்கிற பணங்களை வைத்து வீடுகள் கட்டி வறுமையில் 'சி' கிரேடைவிட மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டு 'ஏ' கிரேடு வரி செழுத்தி வருகிறார்கள் அதனை உடனடியாக ஆய்வு செய்து வரி கட்டணத்தை குறைக்க வழிவகைகள் செய்ய வேண்டும். இந்த இரு கோரிக்கைகளும் உடனடியாக பணிகள் துவங்கி நிறைவேற்ற படவில்லை என்றால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை ஒப்புதலோடு முத்துப்பேட்டையில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார்.

செய்தி மற்றும் படம் :
'நிருபர்' மொய்தீன் பிச்சை, 
முத்துப்பேட்டை

1 comment:

  1. TOO LATE. தண்ணீரெல்லாம் ஓடி கடலில் கலந்துவிட்டபின்- ஆனாலும் Better late than never.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.