கடந்த சில நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு சென்று விற்பனைக்காக மீன்கள் கொண்டு வரப்படுகிறது. தற்போது தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழையால் கடலில் குறைந்த தூரத்திற்கு சென்று மீன்பிடிப்பவர்களின் வலைகளில் காரப் பொடி அதிகளவில் பிடிபடுகின்றன. இந்த மீன்களை அதிரை மீன் மார்க்கெட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது. மருத்துவ குணமுடைய இந்த சிறிய ரக மீன்களை அதிகமான வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.
இதுகுறித்து மீன் வியாபாரி 'நிஜாம்' நம்மிடம் கூறுகையில்...
'சிறிய ரக மீன்களின் வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை ஓரளவு குறைந்திருக்கிறது. காரப் பொடி கிலோ ₹ 60 க்கு விற்கப்படுகிறது. குழந்தை பிறந்த தாய்மார்கள் பால் அதிகளவில் சுரப்பதற்காக இந்த மீன்களை உணவில் அதிகளவில் எடுத்துகொள்வார்கள். தற்போது மழை காலமென்பதால் ஜலதோஷத்திற்க்கு ஏற்றது. மேலும் வாயுகோளாறுக்கும் ரொம்ப நல்லது. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவக்கூடியது' என்றார்.
காரப்பொடி ,கத்தாழம்பொடி,சூரப்பொடி....??? அப்புறம் ??? அதுதான் பழையபாட்டு ....சுண்டெலியைபிடி.
ReplyDeleteகாரப் பொடியிலே மிளகுதண்ணீ வச்சி சாப்புட்டு ரொம்பநாளாச்சி. காரப் பொடிய வாங்கி நன்னா கழுவி எடுத்து பூண்டு அஞ்சிபல்ல இடிச்சி தக்காளி பச்சமொளவா கருவாப்பலய போட்டு நன்னா பெசஞ்சி அதுல ஜீரகத்தூளும் , மிளகுத்தூளும் சேர்த்து வெடவெடண்டு காச்சினா சுடுசொத்துக்கு ரொம்ப பேஷா இருக்கும்னா ...!
ReplyDeleteAaha enna arumai.. Sudu soru milagu thanni... Superah irku
DeletePls comment more recipe
ReplyDelete