.

Pages

Tuesday, November 4, 2014

அதிரை மீன் மார்க்கெட் பகுதிக்கு காரப் பொடி வரத்து அதிகரிப்பு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதே போல் அருகில் உள்ள மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு சென்று விற்பனைக்காக மீன்கள் கொண்டு வரப்படுகிறது. தற்போது தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழையால் கடலில் குறைந்த தூரத்திற்கு சென்று மீன்பிடிப்பவர்களின் வலைகளில் காரப் பொடி அதிகளவில் பிடிபடுகின்றன. இந்த மீன்களை அதிரை மீன் மார்க்கெட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது. மருத்துவ குணமுடைய இந்த சிறிய ரக மீன்களை அதிகமான வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.

இதுகுறித்து மீன் வியாபாரி 'நிஜாம்' நம்மிடம் கூறுகையில்...
'சிறிய ரக மீன்களின் வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை ஓரளவு குறைந்திருக்கிறது. காரப் பொடி கிலோ ₹ 60 க்கு விற்கப்படுகிறது. குழந்தை பிறந்த தாய்மார்கள் பால் அதிகளவில் சுரப்பதற்காக இந்த மீன்களை உணவில் அதிகளவில் எடுத்துகொள்வார்கள். தற்போது மழை காலமென்பதால் ஜலதோஷத்திற்க்கு ஏற்றது. மேலும் வாயுகோளாறுக்கும் ரொம்ப நல்லது. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவக்கூடியது' என்றார்.



4 comments:

  1. காரப்பொடி ,கத்தாழம்பொடி,சூரப்பொடி....??? அப்புறம் ??? அதுதான் பழையபாட்டு ....சுண்டெலியைபிடி.

    ReplyDelete
  2. காரப் பொடியிலே மிளகுதண்ணீ வச்சி சாப்புட்டு ரொம்பநாளாச்சி. காரப் பொடிய வாங்கி நன்னா கழுவி எடுத்து பூண்டு அஞ்சிபல்ல இடிச்சி தக்காளி பச்சமொளவா கருவாப்பலய போட்டு நன்னா பெசஞ்சி அதுல ஜீரகத்தூளும் , மிளகுத்தூளும் சேர்த்து வெடவெடண்டு காச்சினா சுடுசொத்துக்கு ரொம்ப பேஷா இருக்கும்னா ...!

    ReplyDelete
    Replies
    1. Aaha enna arumai.. Sudu soru milagu thanni... Superah irku

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.