33 வது ஆண்டாக நடைபெறும் புத்தகக் கண்காட்சியினை ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி நவம்பர் 5 ஆம் தேதி துவக்கி வைத்தார். அவர் அரபுலகை இலக்கியம், கலாசாரம், அறிவுப் புரட்சி மூலம் அமைதியை ஏற்படுத்த தன்னுடன் இணைந்து கொள்ள வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இக்கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 141 புத்தக நிறுவனங்களும், எகிப்து 140, லெபனான் 105, ரஷியா 75, சிரியா 68, இந்தியா 56, ஜோர்டான் 51, இலண்டன் 51, அமெரிக்கா 27, இத்தாலியின் 13, ஈராக், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
கேராளாவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றாலும், தமிழக புத்தக நிறுவனம் எதுவும் பங்கேற்கவில்லை. புத்தகக் கண்காட்சியினையொட்டி பல்வேறு கருத்தரங்குகள், சிறுவர்,சிறுமியர்க்கான போட்டிகள் உள்ளிட்டவையும் நடைபெற்று வருகின்றன. இலக்கிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. முதல் மூன்று நாட்களில் அரை மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி மற்றும் படங்கள் :
முதுவை ஹிதாயத்








தொன்று தொட்ட பழைய மொழி என்றும் செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் புத்தகங்கள் காணக்கிடைக்காதது பெரும் ஏமாற்றமே.. மலையாள புத்தகங்கள் மட்டுமே இருந்த ஸ்டால்கள் கிட்டத்தட்ட 6-8 இருந்தன. சென்ற வருடமாவது ஒரே ஒரு ஸ்டாலில் சில எண்ணையேயுள்ள புத்தகம் காணக்கிடைத்தது...
ReplyDeleteஇந்திய சுதந்திர போராட்ட வீரரும், மிகச்சிறந்த கல்வியாளரும், முதல் கல்வி அமைச்சருமான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவ., 11ம் தேதி, அவரை கவுரவிக்கும் பொருட்டு "தேசிய கல்வி தினமாக" கொண்டாடப்படுகிறது. அபுல் கலாம் ஆசாத்தை, கல்விப் பேரரசு என மகாத்மா காந்தி அழைத்தார். எழுத்தறிவின்றி ஒரு குடிமகன் இருந்தாலும், அந்நாடு உண்மையான மக்களாட்சி பெற்றதாகாது என்பது ஆசாத்தின் கருத்து.
ReplyDeleteபுத்தக கண்காட்சியில் பங்கேற்பது மூலம் அறிவுத்திறனை மேம்பட வழிவகை செய்யும். இதே போன்று மதுரையில் நடைப்பெற்றது குறுப்பிட தக்கது