.

Pages

Saturday, November 8, 2014

குத்துவிளக்கு சர்ச்சைக்கு அதிரை நியூஸின் தன்னிலை விளக்கம் !

கடந்த [ 09-09-2014 ] அன்று அதிரை நியூஸில் 'மல்லிபட்டினத்தில் புதியதோர் மனைப்பிரிவு 'டாக்டர் கலாம் சிட்டி' நகர் !என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. நமக்கு வந்த நேரடி அழைப்பின் பேரில் அன்றைய தினம் மல்லிபட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலதாமதமாக அதாவது நிகழ்ச்சி முடிந்த பிறகு நாம் கலந்துகொள்ள நேரிட்டது. எனினும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிரை நியூஸில் செய்தி பதிய கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நம்மிடம் வழங்கிய அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள முக்கிய பிரமுகர்களின் பெயர்களை அடிப்படையாக கொண்டு செய்திகள் தொகுக்கப்பட்டது. மேலும் நிறுவனத்தார் நமக்கு அனுப்பிவைத்த 150 க்கும் மேற்பட்ட புகைப்படங்களிலிருந்து சிலவற்றை மாத்திரம் எடுத்துக்கொண்டு இந்த செய்தியில் இணைத்து வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நமதூரை சேர்ந்த இருவேறு தவ்ஹீத் அமைப்புகளிடேயே ( ADT vs TNTJ ) அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, ADT அமைப்பை சேர்ந்தவர்கள் 'அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள், கலாம் சிட்டி நகர் திறப்பு விழாவின் போது குத்துவிளக்கு ஏற்றினார்' என்ற குற்றச்சாட்டை முன் வைத்ததாகவும், இதற்கு அதிரை நியூஸ் செய்தியை ஆதாரமாக விவாத அரங்கில் திரையிட்டு காண்பிக்கப்பட்டதாகவும், தகவலறிந்த அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் விவாதம் நடக்கும் மேடைக்கு நேரடியாக சென்று இவற்றை உறுதியாக மறுத்ததாகவும் நமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களிடம் நாம் பேசிய போது, நிகழ்ச்சியில் தாம் தாமதமாக கலந்துகொண்டதாகவும், அன்றைய நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றவில்லை என்றும் உறுதியாக நம்மிடம் கூறினார். அதேபோல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நமக்கு அனுப்பிய புகைப்படங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தததில் பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றுவது போல் எந்தவொரு புகைப்படங்களும் அதில் இடம்பெறவில்லை என்பதையும் அறிய முடிந்தது. இதுதொடர்பாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேறு சிலரிடம் நாம் விசாரித்த போது, இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றவில்லை என்றே நம்மிடம் கூறினார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நமக்கு வழங்கிய அழைப்பிதழில் குத்துவிளக்கு ஏற்றும் திருவாளர்களில் 'அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம்' அவர்களும் ஒருவர் என்று இருந்ததால், அதன்படி செய்தி தொகுக்கப்பட்டு தளத்தில் பதிய நேரிட்டது என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறோம். எனினும் இந்த சர்ச்சை தொடர நாமும் ஒரு விதத்தில் காரணமாகிவிட்டோம் என்பதை நினைத்து வருத்தமடைகிறோம். தவ்ஹீத் அமைப்புகளை சேர்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்கள் முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் இதுகுறித்து மேலும் விவாதத்தை தொடராமல் சமுதாய ஒற்றுமை கருதி இத்துடன் இவற்றை விட்டுவிடும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி !

அதிரை நியூஸ்

1 comment:

  1. கொள்கைஎற்றோர் யாரு என்பதற்காக நடத்தப்பட்ட விவாதத்தில் இரண்டுக்கும் கொள்கை இல்லை என்பதை ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி பேசி நகைட்ச்சுவையாக நிகழ்ச்சி முடிந்ததாம். இது ஊருக்கும் நாட்டுக்கும் ரொம்ப முக்கியம்! உள்ளூர் நிகல்லுகள் உடனுக்குடன் அள்ளித்தரும் அதிரை நியூஸ் மௌனம் ஏன்?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.