கல்வி என்பதே அறிவை வளர்த்து கொள்வதற்குதானே அதையே தொழில் முதலீடு போன்று நினைத்து நாம் கற்ற கல்விக்கு ஏற்ற பணிக்குத்தான் செல்ல வேண்டும் என்று எண்ணாமல் நம் மனதிற்கு பிடித்தவற்றை தொழிலாக அமைத்து கொண்டால் வெற்றி பெறலாம் என்கிறார் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஹாஜா அலாவுதீன் இவர் சிறு வயது முதலே புறா ,கோழி போன்ற கால்நடைகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர் .சென்னை புதுகல்லூரியில் பிஎஸ்சி கல்லூரி படிப்பை நிறைவு செய்து பட்டதாரியானார். பின்னர் அலுவலகத்தில் பணி புரிந்து வந்தாலும் தனது வேலை நேரம் போக சிறு வயது ஆர்வமான கோழி புறா ஆடு வளர்ப்பு ஆர்வத்தை கைவிடாமல் தொடர்ந்து வந்தார். புறாக்கள் வியாபாரத்திலும் ஈடுபட்டு பொருள் ஈட்டி வந்தார்.
பல்லாண்டுகளுக்கு பிறகு தனது நீண்ட நாள் கனவான கால்நடை பண்ணை அமைப்பது என்ற லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் நரிக்குடி அருகில் மிகப்பெரிய இடத்தில் தனது கால்நடை பண்ணை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். இதில் நூற்றுக்கணக்கான ஆடுகள்,மாடுகள் கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை அமைக்க திட்டமிட்டு பணிகள் நிறைவு பெறும் தருவாயில் இருப்பதாக கூறுகிறார்
மேலும் அவர் கூறியதாவது, சிறு வயதில் இருந்து எனக்கு இது போன்று பறவைகள், ஆடுகள் மாடுகள் என இயற்கை சார்ந்த விசயங்களில் ஆர்வம் அதிகம் பிஎஸ்சி முடித்தாலும் பலரும் ஏன் இதுல உங்கள் நேரத்தை செலவு செய்கிறீர்கள் என கேட்டவர்கள் பலர் ஆனாலும் என் கனவான மிகப்பெரிய ஆடு மாடு கோழி பண்ணை அமைத்து இயற்கை சார்ந்த தொழிலில் ஈடுபட வேண்டும் எனபது அதற்கான பெரும்பாலான ஏற்பாடுகள் நிறைவடைந்து விட்டது.
விரைவில் செயல்பட துவங்கும் மிகுதியாக புறாக்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறேன் ஐரோப்பிய புறாக்கள் வியாபாரத்தில் ஒரு புறாவுக்கு ரூ 10 ஆயிரம் வரைலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் அதை பராமரித்துவளர்ப்பதில் அதிகம் சிரத்தை எடுக்க வேண்டும் இல்லையென்றால் நோய்கள்தொற்றி இறந்து போகும் வாய்ப்பு அதிகம். இவ்வகை புறாக்கள் தமிழகத்தில் பொள்ளாச்சியில் அதிக அளவில் விற்கப்படுகிறது. தற்போது இண்டெர்நெட் மூலம் இந்த வியாபாரம் நடைபெறுகிறது.கொஞ்சம் முதலீடும் பறவைகள் வளர்ப்பில் அனுபவமும் இருந்தால் அதிக லாபம் ஈட்டலாம். இது மிகவும் லாபகரமான தொழிலாகும். இயற்கை சூழல் கொண்ட இத்தொழிலால் மனதிற்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது. அலுவலக பணியை காட்டிலும் இந்த தொழில்தான் அதிக மகிழ்ச்சியை தருகிறது என்கிறார் இந்த பட்டதாரி.
நன்றி: தினகரன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.