.

Pages

Wednesday, January 7, 2015

மகிழ்ச்சியுடன் மணமுடித்த கொழு கொழு குண்டு தம்பதி: ஆரவாரமாய் அரங்கேறிய டும் டும் டும்

பிரித்தானியாவை சேர்ந்த குண்டான தம்பதியினர் ஒருவர் தங்களது திருமணத்தை வெகு சிறப்பாக நடத்தியுள்ளனர். பிரித்தானியாவின் பிளைமெளத்(Plymouth) மகாணத்தை சேர்ந்த (Stephen Beer-Michelle Coombe) ஸ்டீபன் பீர்-மிச்சிலி கோம்பி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தங்களது திருமணத்திற்காக மட்டும் சுமார் 3,000 யூரோக்களை செலவிட்ட இவர்கள், வந்திருந்த 50 பேருக்கு அறுசுவை உணவுகளை பரிமாறி அசத்தியுள்ளனர். ஆனால் இந்த உணவு ஸ்டீபனுக்கு ஒத்துக்கொள்ளாததால் அவர் மருத்துவமனையில் சுமார் 9 நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் இவர்களது தேன்நிலவும் கொண்டாட முடியாமல் போயுள்ளது.

இந்நிலையில் இவ்விரு நபர்களும் அரிய நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு அளவுக்கு அதிகமான எடை கொண்டவராய் உள்ளதால், சில நாட்களிலேயே இறந்துவிடும் அபாயத்தில் உள்ளனர். எனவே இவர்களுக்கு அரசாங்கமே செவிலியர்களை அமர்த்தி அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அத்தம்பதியினர் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நாங்கள் எங்களது மரணத்தை பற்றி கவலைப்படவில்லை என்றும், இருக்கும் வரையில் சந்தேஷமாக வாழ்ந்துவிட்டு செல்லவே திருமணம் செய்து கொண்டோம் எனவும் உருக்கமாக கூறியுள்ளனர்.
Source:dailymail

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    கருத்து சொல்ல மனம் வரவில்லை.‎

    தம்பதிகள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் கிருபை ‎செய்யட்டும்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. தம்பதிகள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் கிருபை ‎செய்யட்டும்.‎

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.