முன்னதாக முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை தமிழக அரசின் அம்மா திட்டம் செயல்பாடு குறித்து பயனாளிகளிடம் விளக்கி கூறினார்.
முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விரைவு பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், குடிநீர் வசதி, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் போன்ற கோரிக்கைகள் உள்பட 227 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 182 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்று அளிக்கப்பட்டது.
அதிரை பேரூராட்சி கவுன்சிலர்கள் ஹாஜா முகைதீன், சிவக்குமார், ரவிக்குமார், அபூதாஹிர், அப்துல் லத்திப், கூட்டுறவு வங்கி சங்க துணை தலைவர் முஹம்மது தமீம், தக்வா பள்ளி ட்ரஸ்ட் உறுப்பினர் ஹாஜா பகுருதீன் உள்ளிட்டோர் முகாமில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர். மேலும் 'அதிரை நியூஸ்' நிர்வாகி கே. இத்ரீஸ் அஹமது தலைமையில் குழுவினர் பயனாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர்.
அதிரை வருவாய் எல்லைக்குட்பட்ட நடுத்தெரு-புதுமனைத்தெரு-சிஎம்பி லேன்-ஆலடித்தெரு-ஆஸ்பத்திரி தெரு-நெசவுத்தெரு-காலியார் தெரு-சுரைக்கா கொல்லை-பழஞ்செட்டி தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மக்களை அலய விடாமல் பயனுள்ள திட்டம்
ReplyDelete