.

Pages

Monday, April 13, 2015

₹ 50 லட்சம் எங்கே ? என கேட்டு அதிரையில் ஒட்டப்பட்ட போஸ்ட்டரால் பரபரப்பு !

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட புதுக்குடி பகுதியில் அமைந்துள்ள செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன்படி கடந்த பல மாதங்களாக குளத்தை புனரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது.

பல ஆண்டுகளாக குப்பை கழிவுகளாலும், கழிவு நீராலும் சூழப்பட்டு துர்நாற்றம் வீசி வந்த குளத்திற்கு விடிவுகாலம் பிறந்ததை கண்டு இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் குளத்தின் முடிக்க வேண்டிய முக்கிய பணிகளில் சிலவற்றை கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கீழத்தெரு ஜமாத்தினர் கடந்த [ 29-04-2014 ] அன்று அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். மேலும் ஜமாத்தின் சார்பில் தஞ்சை சென்று மாவட்ட ஆட்சியரிடமும், பேரூராட்சியின் இணை இயக்குனரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்காக அதிரை வந்த போது கீழத்தெரு ஜமாத்தினர் சார்பில் குளத்தின் இதர பணிகளை விரைவாக முடித்து தர வேண்டுகோள் விடப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அலுவலர்கள் வருகை தந்து குளத்தை நேரடி ஆய்வு செய்தனர். அலுவலர்கள் ஆய்வு செய்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை என்பதால் கீழத்தெரு ஜமாத்தினர் சார்பில் மீண்டும் கடந்த [ 22-09-2014 ] அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்நிலையில் அதிரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் சார்பில், செயனாங் குளம் இங்கே, ₹ 50 லட்சம் எங்கே ? என கேட்டு அதிரை நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்டரால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

3 comments:

  1. தடாலடி வார்த்தைகளால் பேரூர் நிர்வாகத்தை கேள்வி கேட்டு சும்மா கலகிட்டீங்க போங்க; எப்போ இதற்க்கான பதில் எந்த விதத்தில் வருமேன்னு உங்கலேக்கே தெரியாது, கட்சிக் வளர்க்க இது மட்டும் போததேன்னு இன்னும் கூடுதலாக செய்திகள் இருக்கு..., பார்லி., கூட்டம் நடக்கும் போது, டில்லி வரும் எம்.பி.,க்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பார்லி., வளாக அறைகளில் தங்குவர். சிலக் காரனங்களால் வெளியில் ( ஹோட்டலில் ) தங்கி அதிகமாக செலவு வைத்துள்ளார்கள். இதில் கூட்டம் துவங்கும் முன்னரும், கூட்டம் முடிந்த பின்னரும் தொடர்ந்து தங்கியிருக்கின்றனர். இதனால் ரூ. 35 கோடி பில் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகத்திற்கு வந்துள்ளது.

    நீங்க ஒரு தேசிய கட்சி அல்லவா; டெல்லியில் ' அரசு ஒதுக்கிய வீடு இங்கே ! தண்ட செலவு 35 கோடி எங்கே !! நம்ம விஜயக் காந்த் ஸ்டைலில் கலக்கிடுங்க.

    ReplyDelete
  2. தடுப்பு சுவற்றில் ஓட்டை விலுந்து விட்டது அதை அடைத்து தாருங்கள் என்று மாவட்ட ஆட்சியர் சுப்பையனிடம் புகார் மனு அளிக்கவும்.
    I think this subject same as Citizen movie! {pure politics}

    ReplyDelete
  3. நல்ல கேள்விதான். விடை கிடைக்குமா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.