இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:
தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டு பிழையற்ற தூய்மையான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது.
இதற்காக ஏற்கெனவே ஏப். 12-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், 46,595 பேரிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டன.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் அடையாள அட்டை எண், சுய அல்லது குடும்ப உறுப்பினர்களின் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை வாக்கு சாவடி அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
இதில், 1.1.2015 அன்று தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்த வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்குப் படிவம் 6-ஐயும், வாக்காளர்கள் தங்கள் பெயர் பல முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் நீக்கம் செய்வதற்குப் படிவம் 7-ஐயும், தங்களது விவரங்களைத் திருத்தம் செய்வதற்குப் படிவம் 8-ஐயும் அளிக்கலாம். மேலும், மே 10, 24-ம் தேதிகளில் இம்முகாம் நடைபெறவுள்ளது.
பள்ளி விடுமுறைக்கு முன்பாக ஒரு விழிப்புணர்வை மக்களிடம் எடுத்து சென்றிக்க வேண்டும் அதனை தவறவிட்டு விட்டார்கள் எத்தனை பேர் முழுமையாக வாக்காளர் அட்டையில் தங்களுடைய ஆதார் எண், தொல்லை பேசி நம்பர், மின்னஞ்சல் முகவரி சேர்த்து இருப்பார்கள்? வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் தங்கள் ஓட்டுச்சாவடிக்குட்பட்ட வீடுகளில் நேரடியாக சென்று, வாக்காளர்களிடம் ஆதார் எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி பெறும் பணியில் ஈடுபட்டால் வேலை முழுமையடையும், அதோடு கள்ளவோட்டு தவிர்க்கப் படும்.
ReplyDelete