.

Pages

Thursday, April 30, 2015

ஆங்கிலேய அடக்குமுறை சின்னம்: அறுத்தெறிந்த அஞ்சா நெஞ்சன் முகமது சாலியா !

ஆங்கிலேய  கிழக்கு இந்திய கம்பனி ஒன்றுபட்ட இந்தியர்கள் மீது நடத்திய அடக்குமுறையினை எதிர்க்க புறப்பட்ட மக்கள் புரட்சிதான் முதாலாம் விடுதலைப் போர், விடுதலைப் புரட்சி, சிப்பாய்க் கலவரம், என்று பல பெயர்களால் அழைக்கப்படும் 1857ஆம் ஆண்டு நடந்த புரட்சியாகும் என்று நீங்கள் அறிவீர்.

மீரட் நகரில் முதலாவதாக ஆரம்பித்த கலவரம் படிப்படியாக இந்தியாவெங்கும் பரவியது. இந்திய குறுநில மன்னர்கள் பலர் கும்பனி துப்பாக்கிக்குப் பயந்து  ஒடுங்கிப் போயிருந்தாலும், சீக்கிய மன்னர்கள் பலர் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்திய எழுச்சியினை  எதிர்த்தாலும், ஜான்சி நாட்டின் வீர மங்கை லக்ஷ்மி பாயும், அவுத் மாநில அரசியான பேகம் ஹசரத்தும், அவருடைய மகனார் பிர்ஜிஸ் காதிரும் கும்பனி ஆட்சியினை எதிர்த்துப் போரிட்டனர்.

அவுத் மாநிலத்தில் போரினை முன்னின்று நடத்தியவர் யார் என்று தெரிந்தால் உங்களுக்கு எல்லாம்  ஆச்சரியமாக இருக்கும். அவர்தான் மௌலவி அகமதுல்லா. இவர் சென்னையினைச் சார்ந்தாலும் அவுத் மாநிலத்தில் படைத் தளபதியாக இருந்து போரிட்டு இருக்கிறார்.

முதலாம் சுதந்திரப் புரட்சியில்  முக்கிய பங்காற்றியவர்களில் முகலாயிய சாம்ராஜ்ய  சக்கரவர்த்தி பகதுர்சா சபார் அவர்களின்  படைத்தளபதியான பக்த்கான், பெரேலி கான் பகதூர் கான், ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவரும் 1859ஆம் ஆண்டுக் கொல்லப்பட்டார்கள்.

வட இந்தியாவில் புரட்சிப் படைகளை இரும்புக் கரம் அடக்கி, புரட்சிப் படைத் தளபதிகளை ஈவு இரக்கமின்றி கொன்றுக் குவித்த கும்பனிக் கொடூரன் 'கர்னல் நீல்' ஆச்சரியமில்லை!

அந்தக் கொடூரனுக்கு எங்கே சிலை வைத்தார்கள் தெரியுமா ஆங்கிலேயர்கள். சென்னை மாநகர மத்தியில் அமைந்திருக்கும் ஸ்பென்சர் எதிர்புறத்தில் வெண் கலத்தால் சிலை அமைத்தார்கள். அந்தக் கொடூரனுக்கு தமிழகத்தின் தலைநகரில் சிலையா என்றுக் கொதித்து எழுந்த மதுரை இளம் சிங்கம் முகமது சாலியா தனது நண்பனான சுப்ராயளுடன் சென்னை நோக்கி 1927 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புறப்பட்டார்கள் அவர்கள் கையில் துப்பாக்கியில்லை, வெடிகுண்டு இல்லை. மாறாக வெறும் சுத்தியலும், கோடாரியும் தான் அவர்கள் ஆயுதம். கையில் கிடைத்த ஆயதங்களைக் கொண்டு ஒரு ஏனியினை வைத்து கர்னல் நீல் சிலைமீது ஏறி பீடத்திலிருந்து வெட்டிச் சாய்த்தனர். அவர்களுக்கு ஆதரவாக இருந்த 21 போராட்ட வீரர்களும் கைது செய்து சிறைத் தண்டனைப் பெற்றனர். அதன் பின்பு அந்த சிலை ஆங்கிலேயர் ஆட்சி செய்தது வரை நிறுவப்படவில்லை.

இப்போது அந்த சிலை எங்கே இருக்கின்றது தெரியுமா ? சென்னை எழும்பூர் காட்சியகத்தில் ஆதிக்க ஆங்கிலேயரின் காட்சிப் பொருளாக இருக்கின்றது.
1858 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் புரட்சியினை அடக்கினாலும், அந்தப் புரட்சி கும்பனி ஆட்சிக்கு சாவு மணியடித்து பிரிட்டிஸ் அரசின் நேரடிப் பார்வைக்கு இந்திய நிர்வாகம் வந்தது.

டெல்லி செங்கோட்டை ஆண்ட முகலாய சாம்ராஜ்யம், மற்றும் மராட்டிய சாம்ராஜ்யம் முடிவிற்கு வந்தது.

அன்று முதல் சுதந்திரப் புரட்சிக் கனல் தெறிக்க அந்நிய சிலை உடைக்க முகமது சாலியா, அவரது தோழர் சுப்புராயலு ஆகியோர் அண்ணன் தம்பியாக இணைந்து செயலாற்றினர். ஆனால் சுதந்திரத்திற்கு ஒரு வேர்வை கூட சிந்தாத ஆட்சியாளர்கள் இந்திய முஸ்லிம்களை அன்னியர் என்றும், ஓட்டுரிமையினை பறியுங்கள் என்றும், அரசியல் சாசனம் வழங்கிய சலுகைகளைப் பறியுங்கள் என்றும், ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் துவேசமான குரல் எழுப்பி வருவது வேதனையாக இல்லையா உங்களுக்கு ?

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

5 comments:

  1. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி -உ.பி.- பீகார் மற்றும் காஷ்மீரிலுள்ள முஸ்லிம் சகோதர - சகோதரிகள் அளித்த பெருவாரியான வாக்குகளை பி.ஜே.பி. பெற்றது. முஸ்லிம் மக்களின் வோட்டு உரிமை பறிக்கப்பட வேண்டும் என்ற சிவ சேனாவின் கருத்து மிக ஆபத்தானது, கண்டிக்கதக்கது. இத்தகைய முஸ்லிம் விரோத கருத்துக்களை எந்த ஒரு இந்துவும் ஏற்று கொள்ளமாட்டார்கள். மோடி அவ்வப்போது கண்டித்தாலும் சில விசமிகள் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட இஸ்லாமிய தியாகிகள் ஆட்சியாளர்களால் மறைக்கப் பட்டிருக்கிறார்கள் மாறாக அவர்களின் ஹிந்துத்துவா கொள்கைகள் திணிக்கப் பட்டு வருகிறது.

    {புரட்சி கும்பனி ஆட்சிக்கு சாவு மணியடித்து பிரிட்டிஸ் அரசின் நேரடிப் பார்வைக்கு இந்திய நிர்வாகம் வந்தது} - அன்று அந்நியனை விரட்ட போராடினார்கள் இன்று ஊழலையும் லஞ்சத்தையும் விரட்ட போராட வேண்டியுள்ளது. இவனுங்களுக்கு அவனே மேல்!!

    காலச் சுவடுகளை நினைவு படுத்தியமை அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இத்தகைய வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆக்கங்களை அவ்வப்போது எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் காரணம் இந்திய வரலாறு சரியாகத்தெரியாதோர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். வரலாறு தெரியாமல் உளறுபவர்கள் அறிந்து கொள்ளட்டும் . சிறந்த படைப்பை வழங்கி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சகோதரர்கள் மஸ்தான் கனி மற்றும் மொய்சா மிகவும் ஆக்கப் பூர்வமான கருத்துக்களை எப்போதும் வழங்கி வருகிறார்கள். அவர்கள் கருத்துக்கள் என் போன்ற கத்துக் குட்டி எழுத்தாழர்களுக்கு உற்சாகப் படுத்தும். மிக்க நன்றி

    ReplyDelete
  4. நம் தேச தந்தை மகாத்மா காந்தியை கொன்ற கொடூரனுக்கு சிலை வைக்க துடிகிரார்கள், வைக்க விடாமல் தடுப்போம். மீறி வைத்தாள் இஸ்லாமினால் அது சிதைக்கப்படும். வரும் காலம் பேசும் முஹமது சலியா போல்.

    ReplyDelete
  5. துவேச உணர்வுகள் தலைவிரித்து ஆடுகிறது. அது விழத்தான் போகிறது. ஒவ்வொரு உள்ளமும் அமைதியைத்தான் விரும்பும். அமைதியை விரும்புவர்கள் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். இஸ்லாமியன் இல்லாத இந்தியா இல்லவே இல்லை. இருக்கவும் முடியாது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.