பேரூராட்சி பெருந்தலைவர் என். அசோக்குமார் கலைநிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ப.தியாகராஜன் முன்னிலை வகித்தார். தஞ்சை மீரா-சந்தானம் கலைக்குழுவினரின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
'மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து அதற்கான தனித்தனி தொட்டிகளில் சேமித்து, பேரூராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்கவும், சுற்றுச்சூழலுக்கு கேடு உண்டாக்கும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை தவிர்க்கவும், பொருட்கள் வாங்க துணிப்பைகளையே பயன்படுத்த வேண்டும். வர்த்தகர்கள், பொதுமக்கள் குப்பைகளை தெருவில் கொட்டாமல் ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தொட்டிகளையே பயன்படுத்த வேண்டும் ' என வலியுறுத்தி நடைபெற்ற இக் கலைநிகழ்ச்சியின் இறுதியாக பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள் மு.சீனிவாசன், ஆர்.மூர்த்தி, எம்.மூர்த்தி, மணி ரவி, பேரூராட்சி பணியாளர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணியிலிருந்து நமது நிருபர்
பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரிக்கும் போதே ஒவ்வொரு வீடுகளிலும் மட்கும், மட்காத குப்பைகளை தனித்தனியாக சேகரிக்கும் வகையில் வீடுகள், கடைகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு, துப்புரவு பணியாளர்களும், வார்டு கவுன்சிலர்களும் ஒத்துழைத்தால் பேரூராட்சி தூய்மையான பேரூராட்சியாக மாற்ற இயலும்.
ReplyDeleteகூத்தாட்டம் போட்டால் வேடிக்கை பார்த்து விட்டு போய்விடுவதால் துண்டு பிரசுரம் வீடுகள், கடைகளில், பொது இடங்களில் விநியோகம் பண்ண வேண்டும்.