தஞ்சை மாவட்டத்தில் 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 40 சதவீதம் வரை ஆதார் அடையாள எண், இமெயில், கைபேசி விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி கடந்த 8ம் தேதி வரை 25 சதவீத வாக்காளர்களின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 12 மற்றும் 26 ம் தேதி, மே 10 மற்றும் 24ம் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் அடையாள அட்டை எண், சுய அல்லது குடும்ப உறுப்பினர்களின் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி விவரங்களை வாக்குச்சாவடி அலுவலரிடம் அளிக்கலாம்.
மேலும் 1.1.2015ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு படிவம் 6 ஐயும், வாக்காளர்கள் தங்கள் பெயர் பலமுறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் அதை நீக்கம் செய்வதற்கு படிவம் 7 ஐயும், தங்களது விவரங்களை திருத்தம் செய்வதற்கு படிவம் 2 ஐயும் முகாம்களில் அளிக்கலாம். தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,135 வாக்குச்சாவடிகளில் நடை பெறும் பணியை மேற்பார்வை யிட துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் நிலையில் 215 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 8 துணை ஆட்சியர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதால் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இவ்வாறு கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
.jpg)



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.