.

Pages

Tuesday, April 21, 2015

தமுமுக அஹமது ஹாஜா கடுமையாக தாக்கப்பட்டார் - அதிரை இளைஞர் கடத்தல் - இரவில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம் !

 
அதிரையை சேர்ந்தவர் லெ.மு.செ அஹமது ஹாஜா. இவர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பொருளாளராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு பட்டுக்கோட்டையிலிருந்து ஆட்டோ வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். இவருடன் தமுமுக நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, துணைச் செயலாளர் தமீம் அன்சாரி மற்றும் நடுத்தெருவை சேர்ந்த ராஜிக் ( வயது 32 ) ஆகியோர் இருந்தனர். வாகனம் கரிக்காடு அருகே வந்தபோது 15 பேர்கள் கொண்ட கும்பல் ஆட்டோ வாகனத்தை வழிமறித்து கடுமையாக தாக்கினர். இதில் வாகனத்தில் இருந்த ராஜிக்கை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். கும்பல் தாக்கியதில் அஹமது ஹாஜாவுக்கு பலத்த காயமும், மற்றவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த தமுமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமுமுகவினர் திரளாக மருத்துவமனையில் குவிந்துள்ளனர். தப்பியோடிய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், கடத்தி சென்ற ராஜிக்கை மீட்டு தரக்கோரியும் இன்று மாலை பட்டுக்கோட்டை காவல் நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 comments:

  1. காயத்தையும் புகைப்படம் எடுத்து போட்டுங்களேன் மக்கள்் பாா்க்கட்டும்

    ReplyDelete
  2. காயத்தையும் புகைப்படம் எடுத்து போட்டுங்களேன் மக்கள்் பாா்க்கட்டும்

    ReplyDelete
  3. அஹமது ஹாஜா மச்சான் தாக்கபட்ட செய்தி துரதிஷ்டமானது. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவும்

    ReplyDelete
  4. அஹமது ஹாஜா மச்சான் தாக்கபட்ட செய்தி துரதிஷ்டமானது. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.