.

Pages

Saturday, August 20, 2016

177 இந்தோனேஷிய ஹஜ் யாத்ரீகர்கள் விமான நிலையத்தில் தடுப்பு !

அதிரை நியூஸ்:
ஆகஸ்ட் 20
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்திலிருந்து ஹஜ் யாத்திரைக்காக சவூதி அரேபியா புறப்படவிருந்த 177 இந்தோனேஷிய யாத்ரீகர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சுமார் 6,000 டாலர் முதல் 10,000 ஆயிரம் டாலர் வரை கட்டணம் செலுத்தி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான ஹஜ் கோட்டாவில் முறைகேடாக அனுப்பி வைக்க பிலிப்பைனிய ஏஜென்டுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.

இமிக்கிரேசன் அதிகாரிகள் விசாரித்த போது பிலிப்பைனிய பாஷையில் பதிலளிக்க தெரியாததால் பிடிபட்ட இவர்கள் அனைவரும் அதே ஏஜென்டுகளால் டூரிஸ்ட் விசாவில் பிலிப்பைன்ஸிற்குள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்களை மீண்டும் இந்தோனேஷியவிற்கு திருப்பியனுப்பிட தேவையான விபரங்களை இந்தோனேஷிய இமிக்கிரேசன் அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.