அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 24
ஹஜ் யாத்ரீகர்களின் பாதுகாப்பையும் அவசரகால உதவிகளையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த வருடம் அல்லாஹ்வின் விருந்தினர்களின் மணிக்கட்டில் நவீன மின்னனு பட்டியை (e-bracelets) அணிவிக்க சவூதியின் செம்பிறை சங்கம் ஹஜ், உம்ரா அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் மின்னனு கை பட்டியில் உள்ள பார் கோடை (Bar Code) ஸ்மார்ட் போன் (Smart Phone) அல்லது கம்ப்யூட்டர் (On or Off lines) கொண்டு ஸ்கேன் செய்வதன் மூலம் ஹஜ் யாத்ரீகர் குறித்த அனைத்து முக்கிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக, சவூதிக்குள் நுழைந்த தகவல், விசா எண், பாஸ்போர்ட் எண், முகவரி, அவருடைய ஹஜ் ஏற்பாட்டாளர் குறித்த விபரங்கள், அவருக்கு உதவுவோரின் தொலைபேசி எண்கள், புனித மக்கா, புனித மதினா மற்றும் பல புனித இடங்களில் அவருடைய தங்கமிடம் பற்றிய விபரங்கள், அவருடைய மருத்துவ விபரங்கள் என பல்வேறு முக்கியத் தகவல்களை சுமந்திருக்கும்.
இந்த நவீன மின்னனு பட்டிகள் அரபி பாஷை பேசத் தெரியாதவர்கள், வயதானவர்கள், காணாமல் போவோர் என பலருக்கும் நன்மையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.