சவூதி அரேபியா, ஆகஸ்ட் 30
புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள யாத்ரீகர்களின் நலன் கருதி புனித மக்கா நகரைச் சுற்றியுள்ள உணவகங்கள், பேக்கரிகள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவைகளை உள்ளடக்கிய 33 ஆயிரம் உணவு சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்கள் சிறப்பு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
உணவின் தரம், தண்ணீர், இனிப்பு வகைகள் மற்றும் விலை என அனைத்தையும் பல்வேறு அரசு சார் நிறுவன அதிகாரிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுக்கள் கண்காணிக்கும் என்றும் இதில் 33,000 நிரந்தர உணவகங்களுடன் ஹஜ் காலத்திற்கு மட்டும் செயல்பட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள 2,000 உணவகங்களும் சேர்த்து கண்காணிக்கப்பட்டு தவறு செய்வோர் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவர் என மக்கா நகரின் முனிசிபாலிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழில்: நம்ம ஊரான்
இதுதான் சமயமென்று ஹஜ்பயனிகளிடம் கண்டநின்ற உணவுகளை கொடுத்து காஸு பாக்கும் ஆசாமிகளுக்கு சரியான ஆப்பு !
ReplyDelete