.

Pages

Tuesday, August 23, 2016

சவூதி, பஹ்ரைன், கத்தார் இடையே 2 புதிய கடற்பாலங்கள் !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 23
சவூதியின் அல் அஹ்ஸா நகரிலிருந்து பஹ்ரைன் நாட்டையும், கத்தார் நாட்டையும் இணைக்கும் 2 புதிய கடற்பாலங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின்படி, பஹ்ரைனுக்கு அல் அஹ்ஸா (அல்ஹஸா) விலிருந்து சுமார் 40 கி.மீ. நீளத்திற்கு கடல் மேல் பாலம் அமைக்கப்படும், இது ஏற்கனவே உள்ள கிங் பஹத் கடற்பாலத்திலிருந்து (King Fahd Causeway) 100 கி.மீ. தூரத்திலும், ரியாத்திலிருந்து 380 கி.மீ தூரத்திலும் அமைய உள்ளது.

கத்தார் நாட்டுடன் அல் அஹ்ஸாவை இணைக்கும் மற்றொரு கடற்பாலம் சுமார் 25 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்படுவதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ள அல் அஹ்ஸா பஹ்ரைன் கடற்பாலத்திலிருந்து 70 கி.மீ. தூரத்திலும், ரியாத்திலிருந்து 425 கி.மீ. தூரத்திலும் அமைய உள்ளது.

இந்த பாலங்களை அமைப்பதன் மூலம் வளைகுடா நாடுகளுடனான ஒத்துழைப்பு அதிகரிப்பதுடன் பல்வேறு எதிர்கால பயன்களையும் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக, அரபிய இரும்பு பாலத் திட்டம் (Arabian Iron Bridge), வளைகுடா அச்சு நாடுகள் திட்டம் (Arabian Gulf Axis), (எல்லையோர) ஸல்வா நகரிலிருந்து கத்தார் நாட்டிற்கு தரைவழி நுழைவு சாலை, (எல்லையோர) அல் பத்தா நகரிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நாட்டிற்கு தரைவழி நுழைவு சாலை, (எல்லையோர) ஷைபா நகரிலிருந்து ஓமன் நட்டிற்குள் நுழைய புதிய தரைவழி சாலை ஏற்படுத்தும் திட்டம், திட்டமிடப்பட்டுள்ள அல் அகீர் துறைமுகம், திட்டமிடப்பட்டுள்ள ராஸ் அபூ கமீஸ் துறைமுகம், அல் அஹ்ஸா சர்வதேச விமான நிலையம், திட்டமிடப்பட்டுள்ள அல் பத்தா மற்றும் அல் அகீர் விமான நிலையங்கள், அல் அகீரை ரியாத்துடன் இணைக்கும் நேரடி சாலைவழித் திட்டங்களுக்கும் மேற்படி கடற்பாலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியோ இந்தப் பாலங்களுக்கு சம்பந்தமில்லாத நம்ம நாட்டு சிமெண்டு கம்பெனிகள் ஒசி விளம்பர செய்திட இப்படியும் ஒரு வாய்ப்பு! அனுபவம்னே அனுபவம்!!

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.