.

Pages

Sunday, August 28, 2016

தடகள போட்டியில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 28
பள்ளி கல்வித்துறை சார்பில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட உடல் திறன் கழகத்தின் 59 வது குடியரசு தின விழா விளையாட்டு போட்டிகள் 26-08-2016, 27-08-2016 ஆகிய இரண்டு நாட்கள் மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதில், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 90 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்தம் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.  மேலும் சீனியர் பிரிவு மாணவன் பி. முத்துராசு தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

வெற்றி பெற்றவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்தியலிங்கம், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு. பரசுராமன், மாவட்ட ஆட்சியர் ஆ. குணசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சிவி சேகர் ஆகியோர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.

சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவர்கள், பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.