.

Pages

Monday, August 22, 2016

ஈரான் நாட்டில் நடைபெற்ற கபாடி போட்டியில் சாதனை நிகழ்த்திய தஞ்சை மாவட்ட வீராங்கனைக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற   முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபாடி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித் தலைவர்   ஆ.அண்ணாதுரை அவர்களிடம் இன்று (22.08.2016) கோப்பை மற்றும் பரிசுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

2015-2016 ஆம்ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபாடி விளையாட்டுப் போட்டிகள் தேனி மாவட்டம் விளையாட்டரங்கில் 18.08.2016 முதல் 20.08.2016 முடிய மூன்று நாட்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்டதில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடவர் அணியினர் இரண்டாமிடத்தில் வெற்றி பெற்று தலா ரூ.75 ஆயிரம் வீதம் 12 நபர்களுக்கு மொத்தம் ரூ.9 இலட்சம் பரிசுத் தொகையாகவும், மூன்றாமிடத்தில் பெற்ற தஞ்சாவூர் மாவட்ட மகளிர் அணியினர் தலா ரூ.50 ஆயிரம் வீதம் 12 நபர்களுக்கு மொத்தம் ரூ.6 இலட்சம் பரிசுத் தொகையாகவும் வழங்கப்பட்டது. கோப்பை மற்றும் பரிசுத் தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

ஆசிய அளவில் ஈரான் நாட்டில் நடைபெற்ற கபாடி போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை செல்வி ஐ.பவித்ரா என்பவர் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றதை  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.க.பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.