துபையில் மிகவும் பரபரப்பான போக்குவரத்து நேரமான நேற்று மாலை 5.55 மணிமுதல் 7 மணிவரை மெட்ரோ சேவையில் தடங்கள் ஏற்பட்டன. மேலும் இந்த ரெட் லைன் எனும் மெட்ரோ ரயில் தடம் கிரீன் லைன் தடத்தை விட
அதிக பயணிகளால் பயன்படுத்தபடுவது என்பதும் குறிப்பிடத்தக்கது.
துபையின் வேல்டு டிரேட் சென்டர் மற்றும் பைனான்ஷியல் சென்டர் இடையேயும், அல்நூர் பேங்க் மற்றும் எப்ஜிபி பேங்க் இடையேயும் மெட்ரோ ரயில்கள் பாதி வழியில் நிற்க பயணிகள் 40 நிமிடங்களுக்கு மேல் மெட்ரோ ரயில்களுக்குள் காத்திருக்க நேரிட்டது. மேலும் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் பயணிகளால் நிரம்பி வழிந்தன.
மெட்ரோ ரயில்களுள் இருந்த பயணிகளுக்கும் மெட்ரோ நிலையங்களில் காத்திருந்த பயணிகளுக்கும் முறையான அறிவிப்புகள் செய்யப்பட்டு வந்ததுடன் துரித நடவடிக்கையின் மூலம் தொழிற்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் மாலை 7 மணியளவில் மீண்டும் மெட்ரோ சேவை இயங்கத் துவங்கியது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.