.

Pages

Tuesday, August 23, 2016

கத்தார் மற்றும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தாமதம் !

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 23
டெல்லியிலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு டோஹாவில் காலை 4 மணிக்கு வந்து சேர வேண்டிய விமானம் பல்வேறு காரணமில்லா தாமதங்கள் மற்றும் திசை திருப்பி விடப்பட்டதாலும் டெல்லியிலிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு மாலை 5.24 மணியளவில் தோஹாவை வந்தடைந்துள்ளது.

டெல்லியிலிருந்து தோஹாவுக்கு 3 மணி 40 நிமிடங்களே பயண நேரம் என்றாலும் தாமதமாக புறப்பட்ட விமானம் இடையில் ஓமனின் மஸ்கட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது மஸ்கட் நேரம் காலை 9.17 மணிக்கு தரையிறங்கியுள்ளது.

சுமார் 8 மணி நேரம் மஸ்கட்டில் காக்க வைக்கப்பட்ட விமானம் மஸ்கட்டிலிருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு தோஹாவை மாலை 5.24 மணியளவில் வந்தடைந்துள்ளது, ஆக மொத்தம் 13 மணி நேரம் 24 நிமிடங்கள் மட்டுமே தாமதம். தாமதத்திற்கான காரணம் மட்டும் இது வரை அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில் மஸ்கட்டில் சுமார் 1 மணி நேரம் பயணிகள் விமானத்தினுள் காக்க வைக்கப்பட்ட பின்னரே மஸ்கட் விமான நிலையத்திற்குள் இறங்கி காத்திருக்க அனுமதிக்கப்பட்டனர்.

இது இப்படி இருக்க! ஸ்ரீ லங்கன் விமானத்தின் குடிகார விமானியால் பயணிகள் 15 மணி நேரம் காக்க வைக்கப்பட்டனர் என்பதை விட காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸின் விமானி குடித்திருப்பது தெரிய வந்ததால் கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டு மாற்று விமானி மூலம் சுமார் 15 மணி நேர தாமதத்திற்குப் பின் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. 15 மணி நேர தாமதம் 274 பயணிகளின் உயிரை காத்துள்ளது.

இந்நிலையில், சுமார் 1 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ள ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஐரோப்பாவின் பல விமான சேவைகளை ரத்து செய்யவுள்ளது, வரும் அக்டோபர் மாதத்துடன் நிறுத்தப்படவுள்ள பிராங்பர்ட் கொழும்பு சேவையும் அதில் ஒன்று.

பல விமான தடங்களில் சேவைகள் நிறுத்தப்படவுள்ளதாலும் கடனாலும் சேவையில் இருந்து நிறுத்தப்படும் விமானங்களை பிற விமான நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடும் ஐடியாவும் இருக்கிறதாம். இப்போ தெரியுதா வளைகுடா நாடுகளிலிருந்து திருச்சி வரும் பயணிகள் தலையில் ஏன் மொத்தமா மொளகா அரைக்கிறாங்கன்னு!

Source: Gulf News & Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.