.

Pages

Friday, August 26, 2016

ஷார்ஜா-துபாய் இடையே புதிய சாலை செப்.1 ல் திறப்பு !

அதிரை நியூஸ்:
ஷார்ஜா, ஆகஸ்ட் 26
மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஷார்ஜா - துபாய் இடையே போக்குவரத்தை  இலகுவாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று இரு நகரங்களையும் இணைக்கும் கடலடி சாலை திட்டமும் ஒன்று என்பதை அறிவோம்.

கடந்த மாதம் நேஷனல் பெயிண்ட் அருகே மேற்படி காரணத்திற்காக ஒரு இணைப்பு சாலை திறக்கப்பட்டதையும் அறியத் தந்திருந்தோம். இந்நிலையில் எதிர்வரும் 20 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கருத்திற்கொண்டு சுமார் 200 மில்லியன் திர்ஹம் செலவில் 3 கட்டங்களாக 'அல் பதிஆ' (Al Badeea Project) சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அல் பதிஆ சாலை திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படுகிறது. எமிரேட்ஸ் சாலையுடன் ஷார்ஜா மலீஹாவை இணைக்கும் இந்த சாலையால் துபாய் - ஷார்ஜா இடையேயான போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

2017 ஆம் ஆண்டு இறுதியில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த சாலை திட்டத்தின் அடுத்த கட்டமாக 'யூனிவர்சிட்டி சிட்டி' (University City) அருகில் ஷார்ஜா - துபாய் இடையே மேம்பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் கட்டப்பணிகளாக மலீஹா எமிரேட்ஸ் சாலையில் குறுக்கு சந்திப்பாக (Inter Section) அமைந்துள்ள மேம்பாலம் 7 வழிச் சாலையாக விரிவுபடுத்தப்படும்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.