.

Pages

Tuesday, August 23, 2016

ஷார்ஜாவில் 1 மில்லியன் திர்ஹத்துடன் வெளிநாட்டு பிச்சைக்காரர் கைது!

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட்  23
ஷார்ஜாவில் பிச்சைக்காரர்கள் மற்றும் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கும் எதிராக கடந்த 6 மாதங்களாக நடத்தப்பட்டு வந்த 440 அதிரடி சோதனை நடவடிக்கைகளின் விளைவாக 9663 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 6850 பேர் ஆண்கள் 2813 பேர் பெண்கள்.

இவர்களில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு அரபி ஒருவர் அடிக்கடி அமீரகத்திற்குள் வந்து போவதை தொடர்ந்து சந்தேகப்பார்வையை இவர் மீது திருப்பிய அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சுமார் 1 மில்லியன் திர்ஹத்திற்கு மேல் அவருடைய இருப்பிடத்திலிருந்து கைப்பற்றினர், இவை அனைத்தும் பிச்சை எடுத்து சேர்த்தவை.

மேலும் சட்ட விரோதமாக தங்கியிருந்து கூட்டாக மாதம் 1.2 மில்லியன் திர்ஹத்திற்கு மேல் சம்பாதிக்கும் 20 ஆசிய நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக இவர்கள் கைவிடப்பட்ட பழைய கட்டிடங்கள், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட தளங்கள், பிற தொழிலாளர்களின் தங்குமிடங்கள், ஒர்க் ஷாப் ஆகிய பணி இடங்களிலிருந்து பிடிபட்டவர்கள்.

இத்தகைய பிச்சைக்காரர்களும் சட்ட விரோத குடியேறிகளும் அமீரகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன் பலவகையான சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர் என்பதால் இவர்களை பற்றித் தகவல் தெரிந்தவர்கள் உடன் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாள் வரை தீவிரப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. உழைப்பவர்களுக்கு வேலை கொடுக்கா
    விட்டால் இத்தகைய சூழ்நிலைதான்
    ஏற்படும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.