.

Pages

Friday, August 26, 2016

அதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் செப்.2 ல் துவக்கம் !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஜாவியாவில் பல வருடங்களாக ஓதிவரும் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் எதிர்வரும் 02-09-2016 [ 1437-துல்கஅதா பிறை 29 ] வெள்ளிக்கிழமை முதல் அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் கே.டி முஹம்மது குட்டி ஆலிம் தலைமையில் தொடர்ந்து 40 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

தினமும் காலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் ஆரம்பமாகி சரியாக காலை 7-45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொலிவுடன் துஆ ஓதி நிறைவுபெறும். இதன் நிறைவு விழா எதிர்வரும் 15-10-2016 அன்று சனிக்கிழமை காலை நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வழமைபோல் தப்ரூக் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர், வெளியூர் முஸ்லிம் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைய அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாக கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

2 comments:

  1. வாழ்த்துக்கள்
    ஹஜ்ரத்கிப்லா அவர்கலின் அருமையான பயானும், துவாவும் கேட்டு அனைத்து மக்கலும் பயன் பேருவார்கல். இன்ஸா அல்லாஹ்

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ் சந்தோசம் இதை பயன்படுத்தி கோட்டை அமீருக்கு பரிந்துரைக்க கூடாது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.