தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் இன்று (22.08.2016) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.44 ஆயிரத்திற்கான காசோலைகளையும், ஒரு பயனாளிக்கு இறப்பு நிவாரணத் தொகையாக ரூ.12,500க்கான காசோலையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.1500 வீதம் 10 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.15 ஆயிரத்திற்கான ஆணையினையும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5860 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியினையும், 11 பயனாளிகளுக்கு ரூ.12500 மதிப்பிலான உபகரணங்களையும, மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு தலா ரூ.5150 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், 17 பயனாளிகளுக்கு தலா ரூ.4000 மதிப்பிலான அரவை இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5000 மதிப்பிலான மருத்துவ உதவித்தொகைக்கான காசோலையினையும், 7 பயனாளிகளுக்கு ரூ.5000 மதிப்பிலான சிறு வணிக கடனுதவிகளையும், வருவாய்த்துறையின் மூலம் இரண்டு பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், 16 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் வழங்கினார்.
ஆக 97 பயனாளிகளுக்கு ரூ.3 இலட்சத்து 35 ஆயிரத்து 650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், சிறப்பு தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.உதயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.சி.மணி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.