.

Pages

Saturday, August 27, 2016

அபுதாபி உள்ளே நாளை முதல் பேருந்துகள், டிரக்குகள் அனுமதியில்லை !

அதிரை நியூஸ்:
அபுதாபி, ஆகஸ்ட் 27
அவசரப்பட வேண்டாம் அன்பர்களே! பொறுமையான வாசித்து ஒரு தெளிவான முடிவுக்கு வாருங்களேன்.

நாளை முதல் அமீரகத்தின் புதிய கல்வி ஆண்டு துவங்கவுள்ளதை தொடர்ந்து காலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பள்ளி செல்லும் வாகனங்களுக்கும் அலுவலகம் செல்வோருக்கும் இடைஞ்சலில்லாத வகையில் போக்குவரத்து நேரத்தில் சில வகை வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனவே, ஆகஸ்ட் 28 2016 (நாளை) முதல் அதிகாலை 6.30 மணிமுதல் காலை 9 மணிவரை தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் 50 இருக்கை மற்றும் அதற்கு மேலுள்ள பேருந்துகளும், கனரக டிரக்குகளும் அபுதாபி சிட்டியின் உடபுறப்பகுதி சாலைகளில் இயக்க அனுமதியில்லை, மீறுபவர்கள் வழமையாக அபராதம் போன்ற தண்டனைக்குள்ளாவர்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.