.

Pages

Saturday, August 27, 2016

சவூதியில் கார் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டவர்கள் கைது !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 27
சவூதியில் கார் சறுக்கல் (Drifting) விளையாட்டுகளில் ஈடுபடுவது சமீபத்தில் தடை செய்யப்பட்டது என்றாலும் 'தமிழகத்தில் சொல்வது போல் ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா?' மீறி விளையாடிய சவூதி இளைஞர்களும், வேறு சில அரபு நாட்டவர்களும், பாகிஸ்தானியர் சிலரும் ரியாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சவூதியின் புதிய சட்டப்படி, கார் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டு பிடிபட்டால், முதல் முறை 10,000 ரியால் அபராதம் மற்றும் கார் ஒரு மாதத்திற்கு போலீஸாரால் முடக்கப்படும். இரண்டாம் முறையாக ஈடுபட்டால் ஒரு வருடம் சிறையுடன் 10,000 ரியால் அபராதம் மற்றும் கார் 3 மாதங்களுக்கு முடக்கப்படும்.

மூன்றாம் முறையாக பிடிபடுவோர் 40,000 ரியால் அபராதம் செலுத்துவதுடன் அவரது காரும் 1 முதல் 5 ஆண்டுகள் வரை முடக்கப்படும். கார் சறுக்கல் விளையாட்டில் ஈடுபடும் போது 'சும்மா கூட இருந்தாலும்' இருந்தவர்கள் தண்டம் கட்ட வேண்டும்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.