.

Pages

Monday, August 29, 2016

கொசு உற்பத்தி காரணிகள் அழிப்பு மற்றும் சமுதாய விழிப்புணர்வு பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் !

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கத்தரிநத்தம் ஊராட்சியில் தளவாபாளையம் கிராமத்தில் ஊரக பகுதிகளில் நீர் மற்றும் கொசுக்களால் பரவும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு கொசு உற்பத்தி காரணிகள் அழிப்பு மற்றும்; சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை அவர்கள் தொடங்கி வைத்தார்.

கத்திரிநத்தம் ஊராட்சி மன்றத்தில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளும் ஊராட்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசியம் குறித்தும் நோய்கள் தடுப்பு முறைகள் குறித்தும் அறிவுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:

தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் உத்திரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (29.08.2016) முதல் 02.09.2016 முடிய அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள சாலைகள், அரசு கட்டிடங்கள், பள்ளிகள், வீடுகள், நீர் ஆதாரங்கள் ஆகியவற்றில் ஒட்டு மொத்த துப்புறவு பணி ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலமாக ஒருங்கிணைந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊரகப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஒட்டு மொத்த துப்புறவு பணியின் போது குப்பைகளை அகற்றி மேலாண்மை செய்தல், கிருமி நாசினி மருந்துகள் தெளித்தல், கொசு ஒழிப்பு புகைமருந்து தெளித்தல், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, மினி டேங்குகள் ஆகியவை சுத்தப்படுத்தி குளோரினேஷன் செய்தல், கால்வாய் மற்றும் சிறு பாலங்களில் தேங்கியுள்ள மழை நீர், வடிகால் செய்து அகற்றி கொசு உற்பத்தி காரணிகளை அழித்தல், கொசு உற்பத்தியாகக் கூடிய இடங்களான உடைந்த பாத்திரங்கள், பயன்படுத்தப்பட்ட டயர்கள், பயன்படுத்தப்பட்ட தேங்காய் மூடிகள் ஆகியவைகளை முறையாக அப்புறப்படுத்துதல், பள்ளி, கல்லூரிகளில் உள்ள கழிவறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து அலுவலர்களையும், பணியாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

பொது மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேர்ந்த தன்னார்வலார்கள் ஆகியோர் திரளாக இந்த மாபெரும் தூய்மை இயக்க வாரம் பணிகளில் பங்கெடுத்துக்கொண்டு சுகாதாரமான ஊராட்சிகளை உருவாக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை அவர்கள் கெட்டுக் கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) திரு.சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் திரு.கோபு, அம்மாப்பேட்டை ஒன்றிய ஆணையர் திரு.வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) திரு.ஜெகதீசன், பூண்டி அரசு மருத்துவ அலுவலர் திரு.வெங்கடேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் திரு.ஏ.அஜந்தன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.சி.மோகன், ஊராட்சி மன்ற தலைவர் திரு.காயச்செல்வன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஜெய்சரவணன், ஊராட்சி செயலர் திரு.வி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.