தஞ்சாவூர் ஒன்றியம். இராமநாதபுரம் ஊராட்சியில் அண்ணா நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு.ஆ. அண்ணாதுரை அவர்கள் பங்கேற்று பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது: காதாரப் பணியாளர்கள் பொது மக்களிடையே டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், கொசுக்கள் உற்பத்தியாகின்ற இடங்களை கண்டறிந்து பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் திறந்த தண்ணீர் தொட்டிகள், தேங்காய் மட்டைகள், ஆட்டுக்கல், காலியான பெயிண்ட் டப்பாக்கள், டயர், போன்ற இடங்களில் தான் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றது. எனவே, வீடுகளில் பயன்படுத்தப்படும் திறந்த வெளி நீர் தொட்டிகளில் உள்ள நீரினை 3 நாட்களுக்கு மேல் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. கழிவு நீர் கால்வாய் அடைப்ப ஏற்படா வண்ணம், பாலிதீன் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
சுகாதாரத்துறை மற்றும் சித்த மருத்துவத்துறை மூலமாக வழங்கப்படும் நிலவேம்பு கசாயத்தினை பொது மக்கள் பெற்று பருக வேண்டும். தங்கள் வீட்டிலேயே பப்பாளி இலைகளை கொண்டு சாறு தயாரித்து பருகலாம். காய்ச்சல் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவ மனையில் மருத்துவர்களிடம் அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பொது மக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் திரு.ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்கள்.
இவ்ஆய்வின் போது மாவட்ட மலேரியா அலுவலர் திரு.போத்திபிள்ளை, மருத்துவர்கள் திரு.ஜெயபிரகாஷ், திரு.செல்வம், திரு.ஜெயபாஸ்கர், திருமதி.சரண்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.சிங்காரவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.துரை, திரு.சாமிநாதன், ஆகியோர் உடன் இருந்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.