பட்டுக்கோட்டை, ஆக. 29: பட்டுக்கோட்டை கடைவீதியில் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் சரக்கு லாரிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டார லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற இச்சங்க கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தஸ்தகிர், அப்பாவு, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள் விவரம்:
பட்டுக்கோட்டையில் நேரம் காலம் இல்லாமல் கடைவீதியில் நிறுத்தப்படும் சரக்கு லாரிகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் லாரி ஓட்டுநர்களுக்கு ஆதரவாக லோடுமேன்கள் பொதுமக்களிடம் சண்டை சச்சரவில் ஈடுபடுவதும் வழக்கமாகி விட்டது. விரும்பத் தகாத இப்பிரச்னை தொடராமலிருக்க போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கித்தவிக்கும் சூழ்நிலையில் பெரும்பாலான வங்கிகள் தங்கள் வங்கி வாசலில் ஏடிஎம் இயந்திரத்தை வைத்திருப்பதால் பணம் எடுக்க வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, வங்கிகள் புறநகர் பகுதிகளில் ஏடிஎம் மையங்களை அமைக்க வேண்டும்.
பட்டுக்கோட்டையில் தகுதிச்சான்று பெறாத வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுவதால் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கிறது. அதே போல 16 டன் பாரம் ஏற்ற அனுமதி பெற்ற டாரஸ் வகை லாரிகளில் 40 டன் வரை பாரம் ஏற்றி செல்கின்றனர்.
எனவே, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் அனைத்துவகை லாரிகள் மற்றும் தகுதிச் சான்று பெறாத வாகனங்கள் மீது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.