அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 22
துபாய், அபுதாபியை தொடர்ந்து ஷார்ஜாவிலும் குளிரூட்டப்பட்ட பஸ் நிறுத்தங்களை நிறுவ முடிவு செய்துள்ளதாக ஷார்ஜா ஊரக வளர்ச்சித்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 172 பஸ் நிறுத்தங்களிலிருந்து பயணிகள் அதிகம் பயன்படுத்தும் 28 தெரிவு செய்யப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் முதற்கட்டமாக இந்த சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஷார்ஜா ஊரக வளர்ச்சித்துறை (SUPC), ஷார்ஜா சாலை மற்றும் போக்குவரத்துத்துறை (SRTA), ஷார்ஜா மின்சாரம் மற்றும் தண்ணீர் வாரியம் (SEWA) ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளனர். முழுக்க முழுக்க சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் சேமிக்கப்படும் மின்சாரம் இந்த பஸ் நிறுத்த குளிரூட்டிகளை இயக்கப் பயன்படுத்தப்படும்.
தினமும் சுமார் 176,000 பேர் பயன்படுத்தும் மேற்காணும் 28 பேருந்து நிறுத்தங்களிலும் மேலதிக சேவையாக பேருந்து நேர அட்டவணை மற்றும் பஸ் தடங்கள் குறித்த அறிவிப்புகளை மின்னனு தகவல் பலகை (Electronic Bulletin Board) வழியாக தொடர்ந்து அறிவிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.