.

Pages

Thursday, August 25, 2016

கொத்தனாருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

துபை ஆகஸ்ட் 25,
துபையில் கொத்தனாராக பணியாற்றும் உத்தரப் பிரதேச மாநிலம், காஜிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நன்ஹாக்கு யாதவ் என்பவருக்கு 'அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச்' என்ற தனியார் பணமாற்று பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக நடத்திய வருடாந்திர சிறப்புக் குலுக்கலில் இந்தப் பரிசை பெற்றார். 

1,116 திர்ஹத்தை தனது வீட்டு செலவுக்கு கடந்த மாதம் அனுப்பியதை தொடர்ந்து கிடைத்த வாடிக்கையாளர்களுக்கான இலவச கூப்பனே இந்த மில்லியன் திர்ஹத்தை பெற்றுத் தந்துள்ளது. இது அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச் தனது வியாபார விளம்பர விரிவிற்காக நடத்தும் மூன்றாம் வருட மில்லியனர் குலுக்கல் ஆகும்.

3 குழந்தைகளின் தந்தையான 36 வயது யாதவ் மாதம் 1300 திர்ஹம் சம்பளத்தில் பணியாற்றி வருபவர் தற்போது பரிசு விழுந்துள்ளதை தொடர்ந்து தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊர் திரும்பிய பின் தனது குழந்தைகளை வாரனாசியில் உள்ள நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்த படிக்க வைப்பதுடன் ஒரு ஷாப்பிங் கம்ப்ளக்ஸ் ஒன்றையும் கட்ட திட்டமிட்டுள்ளார்.

- நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.