.

Pages

Saturday, August 27, 2016

ஈத்மிலன் கமிட்டி நடத்தும் மாநில அளவிலான கட்டுரை போட்டி கால அவகாசம் செப்.5 வரை நீட்டிப்பு !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 27
கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் எதிர்வரும் 18-09-2016 அன்று அனைத்து சமுதாய பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் பெருநாள் சந்திப்பு - சமுக நல்லிணக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள்ளும் மாபெரும் மாநில அளவிலான கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.

கட்டுரையின் தலைப்புகள்:
இந்திய விடுதலைப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு
இஸ்லாம் மறுக்கும் தீவிரவாதமும், மாநபி போதித்த மனித தர்மமும்
அறிவியல் வழிகாட்டி அல்குர்ஆன்

இதில் வெற்றி பெரும் சிறந்த சாதனையாளர்களுக்கு முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயம், இரண்டாம் பரிசாக 3 கிராம் தங்க நாணயம், மூன்றாம் பரிசாக 2 கிராம் தங்க நாணயம், ஆறுதல் பரிசாக தலா 2 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் 17 நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மாணவ, மாணவிகளின் வசதிக்காக கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் செப். 05, 2016 என கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

போட்டி விதிமுறைகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் குறித்து தகவல்கள் அதிரை ஈத்மிலன் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
பேராசிரியர் செய்யது அஹமது கபீர் 8883184888
கமலுதீன் 9952130909
பேராசிரியர் பிரேம் நவாஸ் 9894845461
பேராசிரியர் அப்துல் ரஹ்மான் 9791911120
பேராசிரியர் சுலைமான் 8825575374


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.