அதிரை நியூஸ, ஆகஸ்ட் 29
உலகில் மிக நீண்ட ஆயுளுடன் வாழ்வது இறைவன் கொடுக்கும் வரம். இத்தகைய பாக்கியம் ஆசைப்படும் அனைவருக்கும் கிடைப்பதில்லை, விதிவிலக்காக இத்தகைய கொடுப்பினை கிடைப்போர் இன்றைய நவீன உலகின் தலைப்புச் செய்தியாய் உலா வருவர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என பேராசைப்படும் மனிதர்களும் இருப்பதாக அல்லாஹ் தனது திருமறையில் 2:96 என்ற வசனத்தில் குறிப்பிடுகிறான்.
இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா தீவிலுள்ள ஸ்ரெகன் எனும் ஊரில் வாழும் 'எம்பாஹ் கோத்தோ' (Mbah Gotho) என்ற மனிதர் 3 நூற்றாண்டுகள் கண்ட 145 வயதுடைய சூப்பர் சீனியர் குடிமகன் எனத் தெரியவந்துள்ளது.
இவர் கடந்த 1870 ஆம் ஆண்டு பிறந்ததாக இதுவரை ஊர்ஜிதம் செய்யப்படாத ஆனால் இந்தோனேஷிய அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆவணங்கள் கூறுகிறது. இவருடைய பிறப்பு ஆவணங்கள் மட்டும் நிரூபிக்கப்படுமேயானால் இவரே உலகின் அங்கீகரிக்கப்பட்ட வாழும் வயதான மனிதராக ஏற்றுக் கொள்ளப்படுவார்.
இவரது நான்கு மனைவியரும் 10 குழந்தைகளும் இறந்து விட 1988 ஆம் ஆண்டுடன் முதற் சந்ததி முடிவுக்கு வந்தது. தற்போது பெயரன் பெயர்த்திகள் (Grand Children), கொள்ளுப் பெயரன் கொள்ளுப் பெயர்த்திகள் (Great Grand Children) என கடந்து தற்போது எள்ளு பெயரன் எள்ளு பெயர்த்திகள் (Great Great Grand Children) காலத்தில் வாழ்கிறார்.
தனது மரணத்தை எந்நேரமும் விரும்பி எதிர்நோக்கியுள்ள இவரின் நீண்ட வாழ்வின் ரகசியத்தை கேட்டால் 'பொறுமை' என்கிறார் ஆனால் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்ற பழமொழியை தான் ரொம்ப சோதிச்சிட்டாருப்பா!
அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களின்படி உலகில் 122 வயது வரை வாழ்ந்தவர் பிரான்ஸை சேர்ந்த பெண்மணி ஜீன் கால்மென்ட் (Jeanne Calment).
அங்கீகரிக்கபடாத ஆவணங்களின்படி உலகில் 171 வயது வரை வாழ்ந்த நைஜீரியர் ஜேம்ஸ் ஒலோபின்துயி (James Olofintuyi), இவருக்கு அடுத்து 163 வயது வரை வாழ்ந்த டகாபோ எப்பா (Dhaqabo Ebba ) என்ற எத்தியோப்பியர். இவர்களுக்கு அடுத்தே மூன்றாமிடத்தில் நம்ம எம்பாஹ் 145 வயதுடன் வாழ்கிறார். கண்பார்வை மங்கியதால் இவரது ஒரே பொழுதுபோக்கு ரேடியோ கேட்பது.
தகவல்: 1
யவராலும் பொய்ப்பிக்கப்பட முடியாத அல்லாஹ்வின் வேதம் கூறுகிறது, நூஹ் நபி (அலை) அவர்கள் 950 வருடங்கள் வாழ்ந்ததாக, இந்த இறைச் சான்றின்படி நூஹ் நபி (அலை) அவர்களே உலகில் அதிக நாட்கள் வாழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரே மனிதர்.
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَلَبِثَ فِيْهِمْ اَ لْفَ سَنَةٍ اِلَّا خَمْسِيْنَ عَامًا ؕ فَاَخَذَهُمُ الطُّوْفَانُ وَهُمْ ظٰلِمُوْنَ
29:14. மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (நன்றி: தமிழில்குர்ஆன்.காம்)
தகவல்: 2
மற்ற எந்த மொழியிலும் இல்லாத சிறப்பாக தமிழில் மட்டும் தான் உறவுகளை சிறப்பிக்க ஒவ்வொரு உறவுக்கும் தனித்தனியாக பெயர் இட்டு சரியாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.
இந்த வாரிசு மரப் படம் அதற்கு ஒரு சான்று.
தன் முன்னோர்களையும் தனக்கு பின் வரும் சந்ததியரையும் தனித்தனியே வெவ்வேறு பெயர் இட்டு மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் வேதனை என்னவெனில் நம் தலைமுறையினரோ இதை பற்றி எல்லாம் அறியாமல் எந்த உறவையும் அங்கிள் என்றும் ஆன்டி என்றும் ஒரு வார்த்தையில் அடக்கி விடுகின்றனர். (செய்தியும் படமும்: சங்கதி.காம்)
Source: Irishmirror
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.