.

Pages

Monday, August 22, 2016

ஜித்தா-மக்கா-மதினா இடையே ஹரமைன் ரயில்கள் விரைவில் இயக்கம் !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 22
புனிதத் தலங்கலான மக்கா மதினா நகரங்களை சவூதியின் அனைத்து முக்கிய நகரங்களுடன் இணைக்கும் திட்டத்தின் முதற்படியான புனித மக்கா ஜித்தா, புனித மக்கா புனித மதினா நகரங்களுக்கிடையேயான அதிவேக ஹரமைன் ரயில்வே திட்டங்கள் கிட்டதட்ட 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. இந்த 480 கி.மீ. தூர ரயில்வே திட்டங்கள் 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டவை.

தற்போது சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் புனித மக்கா மற்றும் ஜித்தா நிலையங்களுக்கிடையில் 7 அதிவேக ஹரமைன் ரயில்களும், புனித மக்கா புனித மதினா நகரங்களுக்கு இடையில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 ஹரமைன் ரயில்கள் என இயக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டின் முதல் காலண்டிற்குள் புனித மதினா ஜித்தா நகரங்களுக்கிடையே முதற்கட்ட ரயில் போக்குவரத்து துவங்கவுள்ள நிலையில், புனித மக்கா ஜித்தா இடையேயான போக்குவரத்து 2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புனித மக்கா மற்றும் புனித மதினா நகரங்களுக்கிடையே தினமும் 36 அதிவேக ரயில் சேவைகளை வழங்குவதன் மூலம் சுமார் 15,000 பயணிகள் பயனடைவர். இந்தத் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு புனித மக்கா ஹரம் ஷரீஃபில் நிகழ்ந்த கிரேன் விபத்தை தொடர்ந்து 'சவூதி பின்லேடன்' கம்பெனியின் கட்டுமான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதால் 7 மாதங்கள் சுணக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Arab News / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.