10ம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என திருச்சி அரசுத்தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் வெ.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் கல்வி ஆண்டில் ( 2016-2017 ) அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் கல்வி பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு ( NTS ) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
இதற்கான படிவத்தை www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணமாக 50 ரூபாயுடன் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வரும் 31ம் தேதிக்குள் ( 31-08-2016 ) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.
மேலதிக தகவலுக்கு www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ-மாணவிகளின் படிப்புக்கு உதவும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன. ஒருபுறம் மாணவர்களின் பொருளாதார, சமூக நிலையைக் கருத்தில் கொண்டும், இன்னொரு புறம் தகுதி அடிப்படையிலும் கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கப்படுகிறது. அந்த வகையில், படிப்பில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகைக்காக 3 வகை யான திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அவை:
1. தேசிய திறனாய்வுத் தேர்வு (National Talent Search Exmn)
2. தேசிய திறனாய்வு மற்றும் கல்வி உதவித்தொகை தேர்வு (National Means cum Merit Scholarship)
3. ஊரக திறனாய்வுத் தேர்வு (TRUST)
தேசிய திறனாய்வுத் தேர்வு
தேசிய திறனாய்வுத் தேர்வு என்பது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வு. இதில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்குகிறது. ஆராய்ச்சிப் படிப்பு (பி.எச்டி.) வரை இந்த உதவித்தொகை கிடைக்கும்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.