.

Pages

Wednesday, August 24, 2016

அதிராம்பட்டினம் கரையூர் தெரு உட்பட 5 இடங்களில் ரூ 9.77 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளங்கள்: முதல்வர் ஜெ. அறிவிப்பு !

குளிரூட்டப்பட்ட கிடங்கு உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய மீன் இறங்கு தளங்கள்  பழவேற்காடு, ஜாம்பவானோடை, அதிராம்பட்டினம் கரையூர்தெரு, கொம்புத்துறை, மோர்பனை ஆகிய 5 இடங்களில் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி  110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையில், கடல் மீனவர்கள் தங்களது மீன்பிடி கலன்களைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், பிடித்து வரும் மீன்களை சுகாதாரமான முறையில் கரை இறக்கிடவும், மீன் ஏலக் கூடம், வலை பழுது பார்க்கும் மையம், குளிரூட்டப்பட்ட கிடங்கு ஆகிய அனைத்து வசதிகளுடன் கூடிய மீன் இறங்கு தளங்கள்  திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு,  திருவாரூர் மாவட்டம் ஜாம்பவானோடை, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர்தெரு தூத்துக்குடி மாவட்டம் கொம்புத்துறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், மோர்பனை ஆகிய 5 இடங்களில் 9.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்த இடங்களில் மீன் இறங்கு தளங்கள் அமைப்பதன் மூலம் 1,379 நாட்டுப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வழிவகை செய்ய இயலும் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.