.

Pages

Monday, August 22, 2016

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு கூடுதல் தற்காப்பு நடவடிக்கைகள் !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 22
இந்த வருடம் ஹஜ் செய்ய வரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் தங்களின் மார்க்கக் கடமைகளை அச்சமின்றியும் அமைதியாகவும் நிறைவேற்றுவதற்கு உதவும் வகையில் பல்வேறு கூடுதல் அவசரகால உதவிகளுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 17 ஆயிரம் அவசரகால பாதுகாப்பு அதிகாரிகள் சுமார் 3 ஆயிரம் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

அவசரகாலத்தில் யாத்ரீகர்களை பாதுகாப்புடன் வெளியேற்றுவதற்கான உத்திகள் பல்வேறு அரசுத்துறைகளின் ஒத்துழைப்புடன் வகுக்கப்பட்டுள்ளன. இந்த உத்திகளின் அடிப்படையில் புனித மக்கா, புனித மதினா உள்ளிட்ட புனித பகுதிகளில் நிகழும் பாரிய விபத்துக்கள் மற்றும் பேரழிவுகளிலிருந்து ஹஜ் யாத்ரீகர்களும், தனியார் மற்றும் அரசுடமைகளையும் காத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அவசரகாலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஹஜ் யாத்ரீகர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் ஊடகங்கள், பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் அதேவேளையில் சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வழியாகவும் மேற்கொள்ளப்படும்.

ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஏற்பாட்டு மையங்களை 911 எண்ணில் எந்நேரமும் தொடர்பு கொண்டு உதவிகளை கோரவும், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தேவையான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உள்துறை அமைச்சகத்தின் அறிவித்தலின்படி ஹஜ் பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும், சாலை பாதுகாப்பு படை, மருத்துவக் குழுக்கள், அவசரகால உதவிக்குழுக்கள், எல்லை பாதுகாப்பு படை என அனைவரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் நீர். நிலம், ஆகாயம், கடற்பரப்பு என தங்களின் சேவைகளை எந்நேரமும் வழங்குவர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.