.

Pages

Wednesday, August 24, 2016

34 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய இயற்கை முத்து !

அதிரை நியூஸ், ஆகஸ்ட் 24
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏழை மீனவர் ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன் கடலில் வெள்ளையாக ஏதோ ஒன்று வலையில் தட்டுப்பட பொறுப்பாக கரைக்கு கொண்டு வந்த மீனவர் அதை ஏதோவொரு அதிர்ஷ்ட (ராசி) கல்லாக நினைத்து தனது படுக்கையறை கட்டிலுக்கு அடியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

வீடு மாற வேண்டிய நிலை அந்த பலவான் தீவு மீனவருக்கு சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட போது, பலவான் தீவின் சுற்றுலாத்துறை அதிகாரியும் தனது அத்தையுமான அய்லீன் அமுரா என்பவரிடம் கொடுத்து வீட்டில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என கூற 'உலகின் மிகப்பெரிய முத்தை' பார்த்த அவருக்கு மயக்கம் வராத குறை தான்.

பின்பு அய்லீன் அமுராவின் ஆலோசணைப்படி, அந்த முத்து நகர மண்டபத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பின்பு தான் தெரிந்தது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை முத்துக்களிலேயே இது தான் மிகப்பிரம்மாண்டமானது, சுமார் 34 கிலோ எடையுடையதென்று, தற்போது நிபுணர்கள் அதனை மதிப்பீடு செய்து வருகின்றனர்.

இதற்கு முன் இதே பலவான் தீவு பகுதியில் 1934 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட 'லாவோ ஜூ' (Lao Tzu) என அழைக்கப்படும் சுமார் 6.4 கிலோ (14 Pound) எடையுடைய முத்தே இதுவரை உலகின் மிகப்பெரிய இயற்கை முத்தாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது,

1939 ஆம் ஆண்டு 3.5 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்ட இந்த முத்து பின் 2007 ஆம் ஆண்டு மறு மதிப்பீடு செய்யப்பட்டபோது 93 மில்லியன் டாலர், இன்றைய தேதியில் 100 மில்லியனுக்கு மேல்.

கற்பூர வாசனை தெரியாமல் 10 ஆண்டுகாலம் 34 கிலோ முத்தை வைத்துக் கொண்டு பஞ்சத்தில் வாழ்ந்த மீனவர் இனி பல மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்.

Source: Gulf News & Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.