.

Pages

Friday, August 26, 2016

தஞ்சாவூர் விமானப் படை நிலையத்துக்கு தென்னக தலைமைத் தளபதி வருகை !

தஞ்சாவூர் விமானப் படை நிலையத்துக்கு தென்னக விமானப் படைத் தலைமைத் தளபதி எஸ். நீலகண்டன் இருநாள் பயணமாக புதன்கிழமை வந்தார்.

இவர் இந்திய விமானப் படையின் தென்னகத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பிறகு தஞ்சாவூர் விமானப் படை நிலையத்துக்கு வருவது இதுவே முதல் முறை.

இவரை தஞ்சாவூர் விமானப் படை நிலையத் தளபதி வி.ஜே. சிங் வரவேற்றார். இதையடுத்து நீலகண்டன், நிலையத்தில் தயார் நிலையில் உள்ள படைத் தளத்தை ஆய்வு செய்தார். நிலையத்தில் நடைபெற்று வரும் நவீனமயமாக்கல் பணி, முதன்மை போர் விமானத் தளப் பணிகளைப் பார்வையிட்ட அவர் பாராட்டினார்.

இவருடன் வந்த விமானப் படை மனைவிகள் நலச் சங்க மண்டலத் தலைவர் உமா நீலகண்டன் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்ட பணிகளை பார்வையிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.