தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் முக்கூட்டுச்சாலை காசிம் நகரில் வசிப்பவர் ரமேஷ். லோடு மேன் பணியாளர். இவரது மகன் மணிகண்டன் ( வயது 5 ) அரசு தொடக்கப்பள்ளி 1 ம் வகுப்பு மாணவன். அதே பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். சமையல் தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீதர் ( வயது 4 ) அரசு பாலகர் பள்ளி மாணவன்.
இந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு அருகே நாய்க்குட்டியின் முனகல் சத்தம் கேட்டுள்ளது. இவற்றை தூக்குவதற்கு இப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் தரையில் கிடந்த கம்பி அருகே சென்றனர். அப்போது மின் ஒயர் கம்பி மீது அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. இவற்றை கவனிக்காத சிறுவர்கள் கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி சுயநினைவு இழந்தனர். உடனே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுவர்கள் உயிர் ஏற்கனவே பிரிந்து இருப்பது தெரியவந்தது.
தகவலரிந்த பட்டுக்கோட்டை வாட்டாட்சியர் குருமூர்த்தி, மதுக்கூர் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், மதுக்கூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சாணக்கியன், கிராம நிர்வாக அலுவலர் மணி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி சிறுவர்கள் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அரசு அதிகாரிகள் பணியில் இருக்கும்போது அவர்கள் இறந்தாலோ அல்லது உறுப்பு இழந்தாலோ அவர்களுடைய வாரிசுகளுக்கு அரசு வேலை நிச்சயம் அதோடு நஷ்டஈடு கொடுக்கப்படுகிறது. மின்சார அதிகாரிகளின் அலட்சியத்தால் சிறுவனின் உயிரை பறித்தார்கள் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் இதுப்போன்ற சம்பவம் நிகழாமல் இருக்கும் இல்லையேல் எவ்வளவு நஷ்டஈடு கொடுத்தாலும் தொடரத்தான் செய்யும்.மின் மிகை மாநிலமாக சொல்லும் முதல்வர் கவனித்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ReplyDeleteமதுக்கூர் மின்சார துறையின் கவனக்குறைவே இதற்க்கு காரணம்.சம்பந்தப்பட்ட ஊழியர் தண்டிக்கப்பட வேண்டும்.பிள்ளைகளை பெற்றவர்களுக்கு இழப்பீடு கொடுக்கவேண்டும்.இதுபோன்ற நிகழ்வுகளில்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தலையிட வேண்டும்.
ReplyDelete