.

Pages

Sunday, August 28, 2016

கணவனால் கைவிடப்பட்டு, மனநலம் பாதிப்படைந்த பெண்ணிற்கு உதவ வேண்டுகோள் !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அனீஸ் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்ஷா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற பெண்ணை உற்றார் - உறவினர்கள் மணமுடித்து வைத்தனர். இந்த தம்பதியருக்கு ஆண் 2, பெண் 1 என 3 பிள்ளைகள். இதில் ஒரு மகன் சற்று மனநலம் பாதிப்படைந்த மாற்றத்திறனாளி. வெளிப் புழக்கமின்றி வீட்டில் முடங்கி உள்ளார்.

அனீஸ், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உணவகமொன்றில் பணிபுரிய மலேசியா நாட்டிற்கு சென்றார். ஆரம்பக்கட்டங்களில் குடும்ப தேவைக்காக மனைவிக்கு பணம் அனுப்பி வந்தவர் நாளடைவில் பணம் அனுப்புவதை அடியோடு நிறுத்திவிட்டார். மேலும் மனைவி மற்றும் வயது வந்த தனது பிள்ளைகளோடு எவ்வித தொடர்புமின்றி இருந்து வந்துள்ளார். இதனால் இவரது குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துள்ளது. வாழ்வாதார தேவைக்கு பலரிடம் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டன. இவர் மலேசியாவில் மற்றொரு பெண்ணை திருமணம் முடித்துவிட்டார் என்ற அதிர்ச்சி தகவலும் இவரது மனைவிக்கு கிடைத்தது.

இந்நிலையில், ஏழெட்டு வருடங்களுக்கு பிறகு தனது கணவர் மலேசியா நாட்டிலிருந்து ஊர் திரும்பும் தகவல் மனைவிக்கு கிடைத்தன. பல ஆண்டுகளுக்கு பிறகு தனது கணவர் ஊர் திரும்புவதை எண்ணி மகிழ்ந்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இவரது கணவர் மலேசியாவிலிருந்து சென்னை வந்தவர், மனைவிக்கு தெரியாமல் மீண்டும் மலேசியா நாட்டிற்கு திரும்பிச் சென்று விட்டார். இதனால் இவரது மனைவி பெரும் ஏமாற்றமடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகினார். நாளடைவில் உடல் மற்றும் மனநல பாதிப்படைந்து அவ்வப்போது மருத்துவர்களிடம் மருத்துவ சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனநல பாதிப்பு முற்றிய நிலையில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பகல், இரவு என தனியாக சுற்றித்திரிகிறார். முக்கிய வீதிகளில் பாட்டு படிப்பதும், முன்பின் தெரியாத நபர்களிடம் வழியச்சென்று பேசுவதும் இவரது அன்றாட நடவடிக்கைகள் பிறர் முகம் சுளிக்கும் அளவிற்கு அமைந்துள்ளன.

இவர் மீதும் பரிதாபப்படும் அதிராம்பட்டினம் வாழ் தன்னார்வலர்கள் சிலர் மனநல பாதிப்பு மற்றும் கடன் சுமையிலிருந்து மீட்டெடுக்கும் தீவிர முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இவரது கடன் மற்றும் வாழ்வாதாரத் தேவையை பூர்த்தி செய்து தேவையான மருத்துவ உதவி வழங்குவதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இந்த அபலை பெண்ணிற்கு உதவ எண்ணுகின்றவர்கள், இணைப்பில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

நிதி உதவி கோரி சமூக ஆர்வலர்கள் நம்மிடம் வழங்கிய SIS முஹம்மது அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : Abul Hasan Sathuli
Bank Name : ICICI Bank
Branch : Pattukkottai Branch
A/C No. 610 90114 9411
IFSC Code: ICIC 0006109

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
அதிரை சித்திக் 0091 9698972525

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.