.

Pages

Monday, August 22, 2016

ஒரு பேஸ்புக் பதிவால் நாட்டையே உலுக்கிய பெண்!

புனேவை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இந்திய நாட்டையே உலுக்கியுள்ளார்.

சுவாதி சிதால்கர் என்ற பெண், தனது பேஸ்புக் பக்கத்தில் தான் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதையும், தனது நாற்காலிக்கு பின்னால், தரையில் தனது குட்டி மகன் படுத்து பால் புட்டியை வாயில் வைத்திருப்பதை போன்ற புகைப்படத்தை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, தரையில் கிடப்பது எனது மகன் அல்ல, எனது இதயம். அவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னோடு இருக்க வேண்டும் என ஆசைப்பட்டான். ஆனால், என்னால் விடுமுறை எடுக்க முடியவில்லை. ஏனெனில் வங்கியில் லோன் விடயம் தொடர்பான பணி கொஞ்சம் இருந்ததால் வேலைக்கு வந்துவிட்டேன்.

தரையில் படுத்துக்கொண்டு எனது மகன் பாலை குடித்துக்கொண்டிருக்கிறான், இதற்கு இடைப்பட்ட நேரத்தில் எனது பணியை முடித்துவிட்டேன். நான் மட்டுமல்ல பணிக்கு செல்லும் பல்வேறு பெண்கள் இதுபோன்று இக்கட்டான சூழ்நிலைகளை சமாளித்துக்கொண்டுதான் பணியாற்றி வருகின்றனர். நாங்கள் இப்படி பணியாற்றுகையில் சட்டசபையில் அமைச்சர்கள் தூங்கி விழுவது எந்த வகையில் நியாமானது. மக்களின் பிரச்சனைகளை முன்னெடுத்து அதற்காக தீர்வினை காண வேண்டும்.

குழந்தையை நான் பார்த்துக்கொண்டது போன்று, பொதுமக்களை அரசியல்வாதிகள் அக்கறையுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த புகைப்படத்தின் மூலம் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என ஆசைப்பட்டேன், அதன்படியே இந்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளேன் என கூறியுள்ளார். இவரின் இந்த பதிவினை பல்வேறு நபர்கள் ஷேர் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.