தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 11 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அதிராம்பட்டினம் பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிராம்பட்டினம் பேரூராட்சி 11 வது வார்டு பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை ( திலகர் தெரு ) முதல் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வரையிலான சாலையோரத்தில் அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி ரூ. 5.75 லட்சம் மதிப்பீட்டில் 135 மீட்டர் நீளத்தில் புதிதாக காங்கிரட் மூடியுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் பணிகளை அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்தல் நெருங்குவதால் என்னமோ வேலை எல்லாம் தடபுடலாக நடைபெறுகிறது போலவே... எல்லாம் உள்ளாட்சித் தேர்தலின் வெளிப்பாடு....
ReplyDelete